• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அமெரிக்க நகரங்களை ஆள்வார்களா இந்தியர்கள்..? லாஸ் ஏஞ்சலசில் போட்டியிடும் தமிழ் பெண் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 3, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
அமெரிக்க நகரங்களை ஆள்வார்களா இந்தியர்கள்..? லாஸ் ஏஞ்சலசில் போட்டியிடும் தமிழ் பெண் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லாஸ் ஏஞ்சலஸ் (அமெரிக்கா), அமெரிக்​கா​வின் மிகப்பெரிய நகரமான லாஸ் ஏஞ்​சலஸ் மேயர் தேர்​தல் அடுத்த மாதம் 2-ம் தேதி நடை​பெறுகிறது. இதில் போட்​டி​யிடும் நித்யா ராமன், தற்​போதைய மேயர் கரேன் பாசுக்கு கடும் சவாலாக உரு​வெடுத்​துள்​ளார். இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த நித்யாராமன். வெற்றி பெறு​வதற்​கான வாய்ப்பு 60 சதவீதம் இருப்பதாக அங்குள்ள கருத்துகணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த தமிழ் குடும்​பத்​தில் 1981-ஆம் ஆண்டு பிறந்​தவர்​தான் நித்யா ராமன். இவருக்கு ஆறு வயது இருக்​கும்போது, பெற்​றோர் அமெரிக்கா​வுக்கு குடிபெயர்ந்​தனர். ஹார்​வர்ட் பல்​கலைக்​கழகத்தில் அரசி​யல் கோட்​பாடும், மசாசூசட்ஸ் தொழில்​நுட்​பக் கல்வி நிறு​வனத்​தில் நகரத் திட்​ட​மிடலும் பயின்​றார். இவர் ஒரு காலத்தில் சென்​னைக்​குத் திரும்​பி, துப்​புரவு மற்​றும் சுகா​தார மேம்பாட்டுக்​காக ஒரு ஆராய்ச்சி நிறு​வனத்​தைத் தொடங்​கி​னார். கடந்த 2013-ம் ஆண்டு லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் குடியேறிய இவர், வீடு இல்​லாதவர்​களுக்​காக செலா (SELAH) என்ற அமைப்​பைத் தொடங்​கி​னார். மேலும், ‘மீ டூ’ இயக்​கத்​துடன் தொடர்​புடைய ‘டைம்ஸ் அப் என்​டர்​டெய்ன்​மென்ட்’ அமைப்​பிலும் பணி​யாற்​றி​னார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்​டன் போன்ற ஜாம்​ப​வான்​களின் ஆதரவு பெற்ற ஒரு​வரை தோற்​கடித்​த நித்யா ராமன், லாஸ் ஏஞ்​சல்ஸ் நகர சபை உறுப்​பின​ராக தேர்ந்தெடுக்​கப்​பட்ட முதல் தெற்​காசி​யப் பெண் என்ற சாதனையைப் படைத்​தார்.

இந்​நிலை​யில், அடுத்த மாதம் நடை​பெற உள்ள லாஸ் ஏஞ்சலஸ் தேர்​தலில் மேயர் பதவிக்கு போட்​டி​யிடு​வதற்​காக கடைசி நேரத்​தில் (பிப்​.7-ம் தேதி) மனுத் தாக்​கல் செய்தார்.

இந்​திய வம்​சாவளியை சேர்ந்த ஜோரான் மம்​தானி கடந்த ஆண்டு நடந்த நியூ​யார்க் மேயர் தேர்​தலில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்​தார். இந்​நிலை​யில், மம்​தானியைப் போல நித்யா ராமனும் லாஸ் ஏஞ்​சல்ஸ் அரசி​யலில் ஒரு பெரிய மாற்​றத்தை ஏற்​படுத்​து​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

லாஸ் ஏஞ்​சல்ஸ் நகர மேயர் தேர்​தலில் மீண்​டும் போட்​டி​யிடும் மேயர் பாசை ஆதரிப்​ப​தாக முதலில் கூறிய நித்யா ராமன், இப்​போது அவருக்கு எதி​ராகப் போட்​டி​யிடுவ​தால், ‘அரசி​யல் துரோகி’ என்று சில அமைப்​பு​கள் இவரை விமர்​சிக்​கின்​றன. ஆனால், ‘இது நட்பு சார்ந்​தது அல்ல, நகரின் எதிர்​காலம் மற்​றும் பிரச்​சினை​களை தீர்ப்​பது சார்ந்​தது’ என்​று நித்​யா பதிலடி கொடுத்துள்ளார்.

நித்யா ராமன் தனது கணவர் சந்திரசேகரன் (தொலைக்காட்சி எழுத்தாளர்) மற்றும் இரட்டை குழந்தைகளான கர்ணா, காவேரி ஆகியோருடன் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருகிறார். நகர்ப்புற திட்டமிடல் நிபுணர் என அவரது பன்முக அடையாளம் வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஒரு முக்கிய மாநகரத்தை நிர்வகிக்கும் பொறுப்பிற்கு ஒரு தமிழ்ப் பெண் போட்டியிடுவது, உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதமிழக சட்டமன்றத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை – ஐந்து முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்?
tamiltamil



Read More

Previous Post

“மீனவர்களின் துயரம் தீரவில்லை” ; வேந்தன் ஆதங்கம்

Next Post

தையிட்டியில் படம் காட்டி இனவாதிகளுக்கு தீனி போடுகின்றனர்…! .இளங்குமரன் எம்.பி சாடல்

Next Post
தையிட்டியில் படம் காட்டி இனவாதிகளுக்கு தீனி போடுகின்றனர்…! .இளங்குமரன் எம்.பி சாடல்

தையிட்டியில் படம் காட்டி இனவாதிகளுக்கு தீனி போடுகின்றனர்...! .இளங்குமரன் எம்.பி சாடல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin