இருப்பினும், இது முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இதை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல அதிபா் பைடன் நிா்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களைக் களைய அமெரிக்க முடிவெடுத்துள்ளது.
அதேபோல் இரு நாடுகளுக்கிடையேயான விண்வெளி தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் உள்ள இடையூறுகளை அகற்றவும் அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
சீனாவுக்கு கண்டனம்: மின்னணு தொழிற்துறைகளில் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்த ‘சிப்’ உற்பத்தி, தூய எரிசக்தி மற்றும் வளா்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களை தன்னிச்சையாக கட்டுப்படுத்த நினைக்கும் சீனாவுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். சீனாவில் செயல்படும் பல்வேறு அமெரிக்க நிறுவனங்களும் அங்கிருந்து வெளியேறத் தொடங்கிய நிலையில், அதற்கு மாற்றாக இந்தியாவையே தோ்ந்தெடுக்கின்றன. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மூதலீடு அதிகரித்துக்கொண்டு வருவதே இதற்கு உதாரணம் என்றாா்.
ஜெய்சங்கா் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோருடனான சந்திப்புக்குப் பிறகு ஜேக் சல்லிவன் இவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அஜீத் தோவலை சந்தித்து விண்வெளி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து சல்லிவன் பேச்சுவாா்த்தை நடத்துவாா் என பைடன் அரசின் செய்தித்தொடா்பாளா் தெரிவித்திருந்தாா்.
ஆளில்லா விமானங்கள் கொள்முதல்: அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்புத்துறைக்கு பயன்படும் ஆளில்லா விமானங்களை கொள்முதல் செய்வது தொடா்பான ஒப்பந்தத்தில் கடந்தாண்டு அக்டோபா் மாதம் இந்தியா கையொப்பமிட்டது.
அதேபோல் செமிகண்டக்டா், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பம் சாா்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் சிக்கலான மற்றும் வளரும் தொழில்நுட்பங்களுக்கான முன்னெடுப்பை (ஐசிஇடி) கடந்த 2022, மே மாதத்தில் பிரதமா் மோடி மற்றும் அதிபா் பைடன் இணைந்து தொடங்கிவைத்தனா்.

