அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து வரக்கூடிய எந்தவொரு புதிய அச்சுறுத்தலுக்கும் எவ்வித புவியியல் எல்லை கட்டுப்பாடுகளும் இன்றி உடனடியாகவும் துல்லியமாகவும் பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) அந்நாட்டு ஆயுதப் படைகளுக்குத் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த பல மாதங்களாக நீடித்து வரும் போர் சூழல் அடுத்தகட்ட தீவிர மோதலாக உருவெடுக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வரும் வேளையில், இன்று (31) சனிக்கிழமை ஈரானிய உச்ச தலைவரிடமிருந்து வெளியாகியுள்ள இந்த கடுமையான எச்சரிக்கை சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி பதிலடி
ஈரான் ஆயுதப் படைகளின் மூத்த தளபதிகளுடன் தெஹ்ரானில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மொஜ்தபா கமேனி இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிரி நாடுகளிடமிருந்து ஏதேனும் அச்சுறுத்தல்களோ அல்லது இராணுவத் தாக்குதல்களோ முன்னெடுக்கப்பட்டால், அதற்கு உடனடி மற்றும் கடுமையான விளைவுகளைத் தரும் வகையில் எதிர்தாக்குதல் அமைய வேண்டும் என்றும், இந்த பதிலடி நடவடிக்கைகளுக்கு எந்தவொரு புவியியல் எல்லைகளும் கிடையாது என்றும் அவர் இராணுவத்திற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
பதற்றமான
நிலையில் வந்துள்ள உத்தரவு
இந்த அதிகாரபூர்வ எச்சரிக்கை அறிக்கை அவரது அதிகாரபூர்வ டெலிகிராம் பக்கத்திலும், ஈரானிய அரசு ஊடகங்களிலும் உடனடியாக வெளியிடப்பட்டது.
ஈரான் உச்ச தலைவரின் இந்த உத்தரவு, இப்பிராந்தியத்தில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் பதற்றமான நிகழ்வுகளுக்கு மத்தியில் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |