• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்க தடைகளை உடைக்க.. ஈரான் போட்ட மெகா பிளான்.. சீனா, துருக்கியுடன் ரகசிய டீலிங்! | Iran Shifts to Open Market Dollar Rate to Counter US Sanctions & Boost Trade with China, Turkey

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்க தடைகளை உடைக்க.. ஈரான் போட்ட மெகா பிளான்.. சீனா, துருக்கியுடன் ரகசிய டீலிங்! | Iran Shifts to Open Market Dollar Rate to Counter US Sanctions & Boost Trade with China, Turkey
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க தடைகளை உடைக்க.. ஈரான் போட்ட மெகா பிளான்.. சீனா, துருக்கியுடன் ரகசிய டீலிங்!

ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முடக்கம் மற்றும் பொருளாதாரம் + வர்த்தக தடைகள் அந்நாட்டின் பொருளாதாரத்தையும், நிதியியல் சந்தையைப் பெரிய அளவில் பாதித்து வரும் நிலையில், ஈரான் அரசு துருக்கி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தகத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது.

இந்த வர்த்தக மேம்பாட்டுக்காக ஈரான் முதலில் தனது நாணய மதிப்பைச் சரி செய்யத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தெஹ்ரான் பல்கலைக்கழக ஆய்வாளர் முகமது இஸ்லாமிய கூறுகையில், ஈரான் பொருளாதாரத்தையும், நிதியியல் சந்தையை வலுப்படுத்த அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

அமெரிக்க தடைகளை உடைக்க.. ஈரான் போட்ட மெகா பிளான்.. சீனா, துருக்கியுடன் ரகசிய டீலிங்!

முன்பு ஈரான் மத்திய வங்கி ரியால் நாணயத்தின் மதிப்பின் சரிவைக் கட்டுப்படுத்த செயற்கையான மாற்று விகிதத்தைக் கொண்டு கன்ட்ரோல் செய்து வந்தது. தற்போது உலக நாடுகள் உடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதாலும், நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் இது ஏற்றதாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் திறந்த சந்தையில் எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல் டாலருக்கு இணையான ரியால் நாணயத்தை மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான மாற்றத்தின் மூலம் ஈரான் மக்களும், வர்த்தகர்களும் டாலரின் சப்ளை, டிமாண்ட் அடிப்படையில் வாங்கவும், விற்கவும் முடியும். மேலும் இப்புதிய கொள்கை மூலம் ஆரம்பக்கட்டத்தில் ரியால் மதிப்பு குறைந்தாலும், சில மாதங்களின் நாணய மதிப்பு, பொருளாதாரம் சீரடையும்.

மேலும் ஈரானில் தற்போது டாலர் போதுமான அளவில் கிடைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, காரணம் வெளிநாட்டு வர்த்தகத்தை அதிகரிக்க ஈரான் மத்திய வங்கி அதிகப்படியாக டாலரைச் சந்தையில் வெளியிட்டு வருகிறது. இதேவேளையில் ஈரான் அரசு அமெரிக்கா அரசின் கடற்படை முடக்கத்தால் கடல் வழி போக்குவரத்து மொத்தமாக முடங்கியுள்ளது.

இதனால் சாலை வழியாக வர்த்தகத்தை எல்லையைப் பகிர்ந்துள்ள சீனா, துருக்கி ஆகிய நாடுகள் உடன் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. குறிப்பாகத் துருக்கிக்குச் சாலை வழியாக வர்த்தகத்தை அதிகரிப்பதற்கும், சீனாவுடன் ரயில் வழியாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேற்கொள்ள ஈரான் அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சீனாவுக்கும், ஈரானுக்கும் மத்தியிலான ரயில் தற்போது 3 நாடுகள் வழியாக மிகவும் ஆக்டிவ் ஆக செயல்பட்டு வருகிறது. சீனாவின் Yiwu (Zhejiang மாகாணம்) துவங்கி, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஈரான் தலைநகர் தெஹ்ரான் வரை ரயில் பாதை உள்ளது.

மேலும் ரியால் நாணய மதிப்பு தற்போது Open Market-ல் மாற்றப்படும் காரணத்தால் மிகவும் மலிவான விலையில் ஈரானில் இருந்து பொருட்களை வாங்க முடியும் என்பதால் பிற நாடுகளுக்கு இது புதிய வர்த்தக வாய்ப்பாக அமைந்துள்ளது.

பிப்ரவரியில் அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடங்கிய பிறகு, ஈரான் மத்திய வங்கியில் அடுத்தடுத்து மாற்றப்பட்ட கவர்னர்கள் இந்த அணுகுமுறைக்கு ஆதரவு தெரிவித்துள்ள காரணத்தால் ரியால் நாணய மதிப்புக்கு விடிவு காலம் பிறந்துள்ளது.

Share This Article

English summary

Iran Shifts to Open Market Dollar Rate to Counter US Sanctions & Boost Trade with China, Turkey

Iran Shifts to Open Market Dollar Rate to Counter US Sanctions & Boost Trade with China, Turkey — அமெரிக்க தடைகளை உடைக்க.. ஈரான் போட்ட மெகா பிளான்.. சீனா, துருக்கியுடன் பிஸ்னஸ் டீலிங்!

Story first published: Wednesday, September 30, 2026, 19:48 [IST]

Read More

Previous Post

பைலட்டை கத்தியால் குத்திய சக விமானி.. நடுவானில் கொட்டிய ரத்தம்.. 17,000 அடி உயரத்தில் நடந்த பயங்கரம் | Flydubai Flight Emergency: Pilots Clash Mid-Air, Plane Makes Emergency Landing in Saudi Arabia

Next Post

தாயின் மரணம் தொடர்பாக மாற்றுத்திறனாளி இளைஞருக்கு மனநலப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது – Malaysiakini

Next Post

தாயின் மரணம் தொடர்பாக மாற்றுத்திறனாளி இளைஞருக்கு மனநலப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin