அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 37 வயதுடைய ரெனீ நிக்கோல் குட் என்ற பெண் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்பின் புதிய குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டு குடிவரவு அதிகாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மினியாபோலிஸ் நகரின் தெற்குப் பகுதியில் உள்ள பழமையான புலம்பெயர் சந்தைகளுக்கு அருகில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் மிகத் தீவிரமான சட்டவிரோதக் குடியேற்றத் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தச் சம்பவம் பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தையடுத்து அமெரிக்கா முழுவதும் பாரிய கொந்தளிப்பு ஏற்பட்டதுடன், சம்பவ இடத்தை திரண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள், அங்கிருந்த உள்ளூர் பொலிஸார் மற்றும் மத்திய அதிகாரிகளுக்கு எதிராகக் கடும் கோஷங்களை எழுப்பினர்.
லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிகாகோ போன்ற நகரங்களில் இதற்கு முன்னர் இடம்பெற்ற குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களைப் போன்றே, இங்கும் மக்கள் விசில்களை ஊதி அதிகாரிகளுக்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (a)


