இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி… அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி… தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு… என நம்மை சுற்றி பல பொருளாதார விஷயங்களும், மாற்றங்களும் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில், கடந்த ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்க கருவூல பத்திரம் இருப்பை அதிகமாகக் குறைத்துள்ளது. இதை அமெரிக்க கருவூலத் துறையின் தரவுகள் உறுதி செய்கின்றன.

அமெரிக்க கருவூலத் துறையின் தரவுகளின் படி, இந்திய ரிசர்வ் வங்கி 2024-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி வரையிலான நிலவரப்படி, 241.4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க கருவூல பத்திரத்தை வைத்திருந்திருக்கிறது.
கடந்த ஆண்டு (2025) அதே தேதியின் நிலவரத்தை எடுத்து பார்த்தால், இந்திய ரிசர்வ் வங்கியிடம் 190.7 பில்லியன் மதிப்பிலான அமெரிக்க கருவூல பத்திரம் மட்டுமே இருக்கிறது.
ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் அறிக்கைப்படி, கடந்த நான்கு ஆண்டுகளில், இந்திய ரிசர்வ் வங்கி மிக குறைந்த அளவிலான அமெரிக்க கருவூல பத்திரம் வைத்திருப்பது இதுவே முதல் முறை.

