Last Updated:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் இன்று தொடங்குகிறது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் இன்று தொடங்குகிறது.
இன்று நடைபெறும் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான பெலாரசின் அரினா சபலென்கா, சுவிட்சர்லாந்து வீராங்கனை ரெபேக்கா மாஸ்ரோவாவை எதிர்கொள்கிறார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியனும், நம்பர் 1 வீரருமான இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் குடியரசு வீரர் விட்கோப்ரிவா உடன் மோத உள்ளார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில், 4 முறை அமெரிக்க ஓபன் உட்பட 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற செர்பியாவின் ஜோக்கோவிச், அமெரிக்காவின் லர்னர் ட்யெனை எதிர்கொள்ள உள்ளார். ஜோக்கோவிச் நடப்பாண்டில் ஒரு கிரான்ட்ஸ்லாம் பட்டம் கூட வெல்லாத நிலையில், தோல்வியை பொய்யாக்கி 25ஆவது பட்டத்தை வெல்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை. எனினும், போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
August 24, 2025 11:02 AM IST


