• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்க ஏஐ நிறுவனங்களுக்கு வேட்டு.. சீனா-வின் அலிபாபா எடுத்த முடிவு.. கைக்கு வரும் 95000 கோடி ரூபாய்! | China’s AI Power Play: Alibaba Raises HK$80 Billion to Challenge US Tech Giants with Full-Stack AI Infrastructure

GenevaTimes by GenevaTimes
August 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்க ஏஐ நிறுவனங்களுக்கு வேட்டு.. சீனா-வின் அலிபாபா எடுத்த முடிவு.. கைக்கு வரும் 95000 கோடி ரூபாய்! | China’s AI Power Play: Alibaba Raises HK$80 Billion to Challenge US Tech Giants with Full-Stack AI Infrastructure
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க ஏஐ நிறுவனங்களுக்கு வேட்டு.. சீனா-வின் அலிபாபா எடுத்த முடிவு.. கைக்கு வரும் 95000 கோடி ரூபாய்!

உற்பத்தி, உலோகம், எலக்ட்ரானிக்ஸ், EV என பல துறையில் சீனா பெரும் ஆதிக்கம் செலுத்தி உலக நாடுகளுக்கு பெரும் சிம்மசொப்பனமாக மாறி இருக்கும் வேளையில் ஏஐ துறையிலும் இதே ஆதிக்கத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

ஏற்கனவே ஏஐ சேவை துறையில் உலகளாவிய நிறுவனங்கள் செலவுகளை குறைக்கும் விதமாக அமெரிக்க நிறுவன ஏஐ மாடல்களை விடுத்து சீனாவின் ஒப்பன் சோர்ஸ் மாடல்களை அதிகளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இந்த நிலையில் Qwen என்னும் ஏஐ மாடலை உருவாக்கிய உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் டெக்னாலஜி நிறுவனமான அலிபாபா ஹாங்காங் பங்கு சந்தையில் சுமார் 80 பில்லியன் ஹாங்காங் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

அமெரிக்க ஏஐ நிறுவனங்களுக்கு வேட்டு.. சீனா-வின் அலிபாபா எடுத்த முடிவு.. கைக்கு வரும் 95000 கோடி ரூபாய்!

பொதுவாக சீனாவில் பெரிய நிறுவனங்கள் பட்டியிலிடப்பட்ட பின்பு இதுபோன்று அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யாது, இந்த வகையில் அலிபாபா மிகவும் அரிதாக 95000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து இதன் மூலம் வரும் பணத்தை மொத்தமாக ஏஐ கட்டமைப்பு மற்றும் அதன் திறனை மேம்படுத்துவதில் அதிக முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

இந்த வருடம் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பெட் மற்றும் இன்டெல் ஆகியவை தனது நிதி தேவைக்காக இதே முறையில் பங்குகளை விற்பனை செய்தது. இதை தொடர்ந்து 3வது பெரிய நிறுவனமாக அலிபாபா தனது பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது.

ஹாங்காங் பங்குச்சந்தையில் 2021க்கு பின்பு நடக்கும் மிகப்பெரிய பங்கு விற்பனையாக இது திகழ்கிறது, இதேபோல் 2019க்கு பின்பு அலிபாபா தனது பங்குகளை பொது சந்தையில் விற்கிறது. முதலில் சிறிய தொகைக்கு மட்டுமே பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்ட அலிபாபா மக்களின் அதிகப்படியான டிமாண்ட் காரணமாக தனது பங்கு விற்பனை அளவை 80 பில்லியன் ஹாங்காங் டாலருக்கு அதிகரித்துள்ளது.

இந்த 95000 கோடி ரூபாய் தொகையை முழுவதுமாக ஏஐ பிரிவில் முதலீடு செய்ய உள்ளதால் உலகளாவிய ஏஐ ரேசில் தனத இடத்தை பலப்படுத்துகிறது சீனா. அலிபாபா சுமார் 710 மில்லியன் பங்குகளை வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவின் விலையை காட்டிலும் 3.6 சதவீதம் தள்ளுபடியில் 112.70 ஹாங்காங் டாலர் மதிப்புக்கு விற்பனை செய்ய உள்ளது.

அலிபாபா நிறுவனத்தில் நிர்வாக அதிகாரம் ஜாக் மா கையில் இருந்து வெளியேறிய பின்பு இந்நிறுவனம் ஏஐ கம்பியூட்டிங், கிளவுட் சேவைகள், ஏஐ சிப், LLM ஆகியவற்றுக்கு தான் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது. மற்ற சேவைகளுக்கு அதன் நிலையான வர்த்தக வளர்ச்சியையை தொடர்வதற்கான முதலீட்டை மட்டுமே செய்து வருகிறது.

மேலும் அலிபாபா நிறுவன்ததின் சிஇஓ Eddie Wu Yongming கூறுகையில் ஏஐ துறையில் முதலீடு செய்யப்படும் முதலீடுகள் அடுத்த 3 வருடத்தில் லாபத்தை கொடுக்கும் என அறிவித்தார்.

Share This Article

English summary

China’s AI Power Play: Alibaba Raises HK$80 Billion to Challenge US Tech Giants with Full-Stack AI Infrastructure

China’s AI Power Play: Alibaba Raises HK$80 Billion to Challenge US Tech Giants with Full-Stack AI Infrastructure — அமெரிக்க ஏஐ நிறுவனங்களுக்கு வேட்டு.. சீனா-வின் அலிபாபா எடுத்த முடிவு.. கைக்கு வரும் 95000 கோடி ரூபாய்!

Story first published: Sunday, August 23, 2026, 21:27 [IST]

Other articles published on Aug 23, 2026

Read More

Previous Post

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்… தேவ்தத் படிக்கலின் சதத்தால் முதல்நாளில் இந்திய அணி அபாரம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

அருகிலுள்ள குடிவரவு தடுப்பு முகாமிலிருந்து தப்பியோடியவர்களைப் பற்றி தானா மேரா பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். – Malaysiakini

Next Post

அருகிலுள்ள குடிவரவு தடுப்பு முகாமிலிருந்து தப்பியோடியவர்களைப் பற்றி தானா மேரா பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin