ஈரான் போரில் ஈடுபட்டிருந்த விமானங்களை இலங்கையில் தரையிறக்குவதற்கான கோரிக்கையை நிராகரித்ததாக இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர்ந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தி கொண்டே இருக்கிறது.
அதற்கு பதிலடி தரும் வகையில் ஈரான் வளைகுடா நாடுகளில் தாக்குதலை நடத்தி வருகிறது.
போர்ப் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
சில நாடுகள் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கின்றனர்.
