ஈரான்
மீதான இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலைக் கண்டித்து, பிரதமர் அன்வார் இப்ராகிம் நாளை டேவான் ராக்யாட்டில் (மலேசிய நாடாளுமன்றம்) தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்யவுள்ளார் என்று பி.கே.ஆர்
(PKR) பொதுச்செயலாளர் புசியா சல்லே இன்று நடைபெற்ற அக்கட்சியின் தலைமைத்துவ கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு தெரிவித்தார்.
பி.கே.ஆர் தலைவருமான
அன்வார், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்துள்ளதுடன், இது மத்திய கிழக்குப்
பகுதியை “பேரழிவின் விளிம்பிற்கு” தள்ளக்கூடிய ஒரு நடவடிக்கை என்றும்
குறிப்பிட்டுள்ளார்.
இந்தத்
தாக்குதல்களைத் தொடங்கியதற்காக இஸ்ரேலை விமர்சித்த அவர், வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைப்பதற்கும், கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடிய இந்த மோதலில் பிற
நாடுகளையும் ஈடுபடுத்துவதற்குமான ஒரு பொறுப்பற்ற முயற்சி
இதுவென்றும் விவரித்தார்.
“போர் நடவடிக்கைகள் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் நிறுத்தப்பட வேண்டியது அவசியம்,” என்று அவர் கூறினார். மேலும், அமெரிக்காவும் ஈரானும் ஒரு இராஜதந்திர தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-fmt
