அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களை நாடு திரும்புமாறு இந்திய தொழிலதிபர் ஶ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது…
“அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு திறந்த மடல்.
பாரதத்தைச் சேர்ந்த என் அன்பு சகோதர சகோதரிகளே:
சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு நான் எப்படி சென்றேனோ, அதேபோல்தான் நீங்களும் கையில் பணமில்லாமல், ஆனால் பாரதத்தின் சிறந்த கல்வியையும் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் சுமந்து அமெரிக்காவிற்கு சென்றிருப்பீர்கள்.

இன்று மிகச்சிறந்த வெற்றிகளைக் குவித்திருக்கிறீர்கள். அமெரிக்கா நமக்கு நல்ல வாழ்வை அளித்துள்ளது, அதற்காக நாம் நன்றியுடன் இருக்க வேண்டும்—ஏனெனில் “நன்றி மறவாமை’ என்பது நமது பாரதப் பண்பாடு.
இருந்தாலும் இன்று ஒரு கசப்பான உண்மை என்னவென்றால், கணிசமான எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள், இந்தியர்கள் அமெரிக்க வேலைவாய்ப்புகளை ‘பறித்துக் கொள்கிறார்கள்’ என்றும், நமக்கு வெற்றி நியாயமற்ற முறையில் கிடைத்தது என்றும் நம்புகிறார்கள்.

