• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு? – தாய்லாந்து நீர் யானை கணிப்பு வீடியோ வைரல் | Video: Viral hippo Moo Deng predicts who will win US presidential election

GenevaTimes by GenevaTimes
November 5, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு? – தாய்லாந்து நீர் யானை கணிப்பு வீடியோ வைரல் | Video: Viral hippo Moo Deng predicts who will win US presidential election
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாங்காக்: உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தாய்லாந்தில் ‘கா கியோவ்’ திறந்தவெளி உயிரியல் பூங்காவில் உள்ள நீர்யானை அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என கணித்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த நீர்யானை அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவார் எனக் கணித்துள்ளது.

கவனம் ஈர்த்த ‘ஹிப்போ’ – மூ டெங் (Moo Deng) என்ற பெயரிடப்பட்ட அந்த நீர்யானையின் முன் பூங்கா பராமரிப்பாளர்கள் இரண்டு தர்பூசணிப் பழங்களை வைத்தனர். ஒன்றில் ட்ரம்ப் பெயரும், மற்றொன்றில் கமலா ஹாரிஸ் பெயரும் பொரிக்கப்பட்டிருந்தது. அந்த குட்டி நீர்யானை நேராக ட்ரம்ப் பெயர் பொரித்திருந்த தர்பூசணியை நோக்கிச் சென்று அதை புசித்தது. அருகிலிருந்த மற்றொரு பெரிய நீர் யானை கமலா ஹாரிஸ் பெயர் இருந்த தர்பூசணிப் பழத்தை உண்டது. இதன் மூலம் மூ டெங், அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தான் வெற்றி பெறுவார் எனக் கணித்ததாகக் கூறப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், அணி மாறும் மாகாணங்களில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ட்ரம்ப்புக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த ‘ஹிப்போ ஜோசியம்’ வீடியோ கவனம் பெற்றுள்ளது.

இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி அமெரிக்க மக்கள் 70 லட்சத்து 80 ஆயிரம் பேர் ஏற்கெனவே தங்கள் வாக்குகளை செலுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் வாக்காளர்கள் எப்போது வேண்டுமானாலும் தபால் மூலம் வாக்களிக்கலாம்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்த உடன் அனைத்து மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். பெரும்பாலும் அன்றிரவே புதிய அதிபர் யார் என்பது உறுதி செய்யப்படும். இழுபறி நீடித்தால் ஓரிரு நாட்களுக்குப் பிறகே முடிவு தெரியவரும். எனினும் ஜனவரி 6ஆம் தேதியே அமெரிக்க அதிபர் யார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். ஜனவரி 20 ஆம் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா நடைபெறும்.



Read More

Previous Post

அபதாபி பங்குச் சந்தையில் ஐபிஓ மூலம் ரூ.14,000 கோடி திரட்டும் லுலு ரீடெய்ல் நிறுவனம் | Lulu Abu Dhabi IPO set to become UAE biggest listing 2024

Next Post

3.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள காலணி, கைப்பைகள் கடத்தலை முறியடித்த கிளந்தான் போலீசார் | Makkal Osai

Next Post
3.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள காலணி, கைப்பைகள் கடத்தலை முறியடித்த கிளந்தான் போலீசார் | Makkal Osai

3.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள காலணி, கைப்பைகள் கடத்தலை முறியடித்த கிளந்தான் போலீசார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin