
Last Updated:
உக்ரைனுடனான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் அறிவித்துள்ளார்.
உக்ரைனுடனான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக அண்மையில் பதவியேற்ற டிரம்ப், உக்ரைன் போரை ரஷ்யா நிறுத்தவில்லை என்றால் கடும் வரி விதிப்பதுடன், பல்வேறு தடைகளையும் விதிக்க நேரிடும் என்று கூறியிருந்தார். அதிபர் டிரம்ப்பின் பேச்சுக்கு பதில் அளித்துள்ள புதின், 2022-ல் அதிபராக டிரம்ப் இருந்திருந்தால் உக்ரைன் போரே நடந்திருக்காது என்றார்.
மேலும் பேச்சுவார்த்தைக்கு தாம் தயாராக இருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் புதின் கூறியுள்ளார். 2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றியை எதிரணி திருடிவிட்டதாகவும் புதின் விமர்சித்தார்.
January 25, 2025 10:34 AM IST

