Last Updated:
ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய நிறுவனங்களுக்குப் பெரும் வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்
அமெரிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த உலகளாவிய வரிகளை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டது. இதற்குப் பதிலடியாக, அதிபர் டிரம்ப் புதிய சட்டப்பிரிவுகளின் கீழ் முதலில் 10% வரியையும், பின்னர் அதனை உயர்த்தி 15% வரியையும் அனைத்து நாடுகளுக்கும் விதிப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த அதிரடி மாற்றங்களால் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் 18% வரி விதிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 15% வரி அமலுக்கு வருமா அல்லது பழைய 18% வரியே நீடிக்குமா என்பதில் ஒரு தெளிவற்ற சூழல் நிலவுகிறது.
இருப்பினும், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் பெரிய மாற்றங்கள் இருக்காது என டிரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையை மத்திய அரசு மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த புதிய வரி விதிப்பு முறைகளால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் சாதக பாதகங்களை வர்த்தக அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.
இதற்கிடையில், பிப்ரவரி 23 முதல் மூன்று நாட்களுக்கு அமெரிக்காவில் நடைபெறவுள்ள இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் உயர்மட்டக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதிக்கும் புதிய 15% வரி – இந்திய ஏற்றுமதிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

