Last Updated:
அமெரிக்காவால் திருப்பி அனுப்பப்பட்ட 11 இந்தியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி, ஜலந்தர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறி, அமெரிக்க அரசால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 11 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில், அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை அடையாளம் கண்டு அவரவர் தாய்நாடுகளுக்கு அனுப்பி வருகிறார். இதுவரை 4 கட்டங்களாக இந்தியர்களை அமெரிக்க அரசு ராணுவ விமானத்தில் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியது. இந்த சூழலில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறியவர்களில் 11 பேருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அளித்ததுடன் ஜலந்தரில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவுக்கு நுழைய முகவர்களுக்கு தலா 40 முதல் 50 லட்சம் ரூபாயை அளித்தது எப்படி என்பது குறித்து விசாரணையை நடத்தவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சம்மன் அனுப்பப்பட்ட 11 பேரில் ஒருவர் ஹரியானாவையும், 10 பேர் பஞ்சாபையும் சேர்ந்தவர்களாவர். அமெரிக்காவுக்குள் நுழைய உதவிய முகவர்கள் யார் போன்ற விவரங்களையும் விசாரிக்க அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 06, 2025 9:42 PM IST


