Last Updated:
அமெரிக்கா ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15% வரி விதிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 15 சதவிகித இறக்குமதி வரி விதிக்கும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இரண்டாம் முறையாக அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் பிற நாடுகள் இடையேயான வரிவிதிப்பு முறைகளை டிரம்ப் மாற்றியமைத்து வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 15 சதவிகித இறக்குமதி வரி விதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜப்பான் அரசாங்கத்துக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தில் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு 15 சதவிகிதமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள், லாரிகள், அரிசி மற்றும் குறிப்பிட்ட சில வேளாண் பொருட்களை ஜப்பானில் இனி விற்பனை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அலாஸ்காவில் இருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்ய ஜப்பானுடன் இணைந்து அமெரிக்கா ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கும் என்ற தகவலையும் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இதனிடையே, இந்தியா – அமெரிக்கா இடையே ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
July 23, 2025 3:59 PM IST
அமெரிக்கா – ஜப்பான் வர்த்தக ஒப்பந்தம்: 15% இறக்குமதி வரி விதிப்பு.. டெனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!


