Last Updated:
மற்ற நாடுகளுக்கான வரி உயர்வை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்த டிரம்ப், சீன பொருட்களுக்கான வரியை மட்டும் 125 சதவிகிதமாக உயர்த்தினார்.
அமெரிக்கா-சீனா இடையிலான வரி யுத்தத்தால், இந்தியாவில் செல்போன், பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2ஆம் தேதி உலக நாடுகள் மீது பதிலுக்கு பதில் இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 34 விழுக்காடு வரி விதித்தது. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 34 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது.
சீன பொருட்களுக்கு வரி உயர்வு
இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, சீன பொருட்களுக்கான வரியை 104 சதவிகிதம் உயர்த்திய நிலையில், அமெரிக்கா மீது 84 விழுக்காடு சீனா வரி விதித்தது. இந்நிலையில், மற்ற நாடுகளுக்கான வரி உயர்வை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்த டிரம்ப், சீன பொருட்களுக்கான வரியை மட்டும் 125 சதவிகிதமாக உயர்த்தினார்.
Also Read: முற்றிய வர்த்தகப் போர்.. அமெரிக்கா செல்லும் சீனர்களுக்கு சீன அரசு எச்சரிக்கை
குறைந்த விலையில் பொருட்கள்
இதனால், சீனாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை, இந்தியா போன்ற நாடுகளிடம் குறைந்த விலைக்கு விற்க அந்நாடு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இந்தியாவில் செல்போன், பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மே மற்றும் ஜூன் மாதங்களில் புதிய ஆர்டர்களை செய்யும் போது குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
April 11, 2025 7:25 AM IST


