கச்சா எண்ணெய் என்றதுமே நமக்கு மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ரஷ்யா உள்ளிட்டவை நம் நினைவுக்கு வரும் உற்பத்தியை பொறுத்த அளவில் அமெரிக்கா ஆண்டுக்கு மிக அதிகமாக கச்சா எண்ணையை உற்பத்தி செய்து வருகிறது.
சவுதி அரேபியா, ஈரான், ஈராக் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் பெரும்பாலும் கச்சா எண்ணெய் வளம் மிக்கவை என்று கூறப்பட்டாலும், எண்ணெய் இருப்பு வைத்திருப்பதில் அவை முதலிடத்தில் இல்லை.
வேர்ல்டோமீட்டரின் தரவுகளின்படி வெனிசுலா நாடுதான் கச்சா எண்ணெயை அதிகம் சேமித்து வைத்திருக்கிறது. அங்கு சுமார் 303,008 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் நிலத்தடியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
ஒரு பீப்பாய் அல்லது பேரலில் சுமார் 159 லிட்டர் கச்சா எண்ணெய் இருக்கும். ஆனால் இவ்வளவு எண்ணெய் வளம் இருந்தபோதிலும், வெனிசுலாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதன் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். உலகின் மிக அதிக பணவீக்கம் கொண்ட முதல் 5 நாடுகளில் வெனிசுலாவும் இடம்பெற்றுள்ளது.
இரண்டாவது இடத்தில் சவுதி அரேபியா உள்ளது, சுமார் 267,230 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவைப் போலல்லாமல், சவுதி அரேபியா மிகவும் வலுவான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருப்பதுடன், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்களிலும் அது வளர்ந்து வருகிறது.
ஈரான் 208,600 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. நான்காவது இடத்தில் ஈராக் உள்ளது, இது சுமார் 145,019 மில்லியன் பீப்பாய்களைக் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) 113,000 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்புடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளர்களில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அறிக்கைகளின்படி, இந்தியா தனக்குத் தேவையான எண்ணெயில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. மத்திய கிழக்கில் நிலவும் நிலையற்ற சூழ்நிலை காரணமாக, இந்தியா ரஷ்யா மற்றும் அமெரிக்காவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
July 03, 2025 2:48 PM IST