Last Updated:
ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி, 35 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார்.
கனடாவில் நடந்த ஜி7 உச்சமாநாட்டில் டிரம்பை பிரதமர் மோடி சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், முன்கூட்டியே அமெரிக்க அதிபர் டரம்ப் புறப்பட்டுச் சென்றதால் அவருடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தோட்டாக்களை பயன்படுத்தினால், இந்தியாவும் பதிலுக்கு தோட்டாக்களைத் தான் பயன்படுத்தும் என்றும் டிரம்பிடம் மோடி தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் இந்தியா – பாகிஸ்தான் இடையே சமரச பேச்சுவார்த்தையை அமெரிக்கா செய்வதை இந்தியா விரும்பவில்லை என்றும் மோடி குறிப்பிட்டதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும் அமெரிக்காவுக்கு வரும்படி டிரம்ப் விடுத்த அழைப்பை, பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்து விட்டார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளால் அமெரிக்காவுக்கு வர முடியாத சூழல் இருப்பதாகவும் டிரம்பிடம், மோடி தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
June 18, 2025 1:25 PM IST


