Last Updated:
எவெர்கிளேட்ஸில் உள்ள பிரபல உயிரியல் பூங்காவிற்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
புளோரிடா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள எவெர்கிளேட்ஸில் காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் மளமளவெனப் பற்றிய தீ, வனப்பகுதி முழுவதும் பரவியது. இதில், சுமார் 7,000 ஏக்கர் அளவிலான வனங்கள் தீக்கிரையாயின. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அமெரிக்காவின் புளோரிடாவில் காட்டுத்தீ
குடியிருப்புப் பகுதிகளுக்கு தீ பரவாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தீயணைப்புத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், எவெர்கிளேட்ஸில் உள்ள பிரபல உயிரியல் பூங்காவிற்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ள நிலையில், காட்டுத்தீ கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
May 12, 2026 10:58 AM IST


