அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளை எதிர்க்கும் கனடிய பிரதமர் மார்க் கார்னியை (Mark Carney), அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் (JD Vance) கடுமையாகச் சாடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூயார்க்கில் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தெரிவித்துள்ள அவர், கார்னி நான் டொனால்ட் ட்ரம்பை விடக் கடுமையாக நடந்துகொள்ளப் போகிறேன் என்று காட்டிக்கொள்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க மதுபானங்கள்
இருப்பினும், இறுதியில் பல விவகாரங்களில் அவர் பணிந்துதான் போவதாகவும் இது கனடாவுக்குப் பெரிய வெற்றி என்று அவர் சித்தரிப்பது வேடிக்கையாக இருக்கின்றது எனவும் வேன்ஸ் தெரிவித்துள்ளார்.

கனடா மீது 50 வீதம் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் தெரிவித்த நிலையில் இதற்கு முக்கியக் காரணம் கனடாவில் அமெரிக்க மதுபானங்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததுதான்.
இந்தநிலையில் வர்த்தக வரி உயர்வைக் தவிர்க்க அமெரிக்க மதுபானங்களை மீண்டும் விற்பனைக்கு அனுமதிக்க கனடா ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வர்த்தகப் பேச்சுவார்த்தைகள்
இந்தச் சூழலில் வேன்ஸின் கருத்து இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கனடிய மாகாண தலைவர்கள் பலர், பிரதமர் கார்னி அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகப் பணிந்து செல்வதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அமெரிக்கத் தயாரிப்புகளைத் தடையின்றி விற்க அனுமதித்தாலும் அவற்றை வாங்க வேண்டாம் என்று மக்களிடம் வேண்டுகோளும் விடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரம், அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளபோது வெளிவந்துள்ளது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

