அமெரிக்கா – ஈரான் போரில் புது டிவிஸ்ட்.. அமெரிக்கா அனுப்பிய ரகசிய லெட்டர்..!!
வளைகுடா நாடுகளை மொத்தமாகப் பதற்றத்தில் வைத்திருக்கும் அமெரிக்கா – ஈரான் போர் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது, நவம்பர் மாத போருக்காக அமெரிக்கா தொடர்ந்து ராணுவ வீரர்களை அதிகரித்து வரும் வேளையில், ஈரானும் இப்போரை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா – ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு தரப்பில் புதிய அமைதி ஒப்பந்த மத்தியஸ்தர்கள் நாடுகள் வாயிலாக ஈரானுக்கு அனுப்பியுள்ளது.

அமெரிக்காவில் ஈரான் அதிகாரிகள் உடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஈரான் அரசின் 7 முக்கிய குறிக்கோள்களை ஏற்க அமெரிக்கா அரசு தற்போது புதிய அறிக்கையைக் கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் புதிய அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரான் நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரும், அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில் முக்கிய தலைவராக இருக்கும் முகமது பாகர் கலிபாஃப் கூறுகையில், அமெரிக்கர்களும், டிரம்பும், அந்நாட்டின் டிவி, பத்திரிக்கைகளில் ஈரானுடன் போர், ஈரானுடன் சமரசம் இல்லை எனக் கூறிக்கொண்டு இருக்கும்போது, தற்போது அமெரிக்க அரசு தனது மத்தியஸ்தர்கள் நாடுகள் வாயிலாக புதிய அமைதி திட்டத்தை முன்வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் டிரம்ப் அரசால் தற்போது முன்வைக்கப்பட்டு உள்ள அமைதி திட்டம் என்பது ஏற்கனவே அமெரிக்கத் தரப்பில் முன்வைக்கப்பட்ட அதே திட்டம் தான் எனவும் விளக்கியுள்ளார் முகமது பாகர் கலிபாஃப். இதன் மூலம் அமெரிக்க அரசு தொடர்ந்து ஈரான் உடன் பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்து வருவது உறுதியாகிறது.
அடுத்தாக இவர் சொன்ன விஷயம் தான் மிகவும் முக்கியமானது, இப்புதிய திட்டத்துடனோ அல்லது இனி அமெரிக்கா தரப்பில் சமர்ப்பிக்கப்படும் புதிய திட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஈரான் அரசுக்கு எவ்விதமான திட்டமும் இல்லை. தற்போது காலம் கடத்தும் முயற்சிகளும், ஒரே நிபந்தனைகளும் இரு நாடுகளும் முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தும் காலம் கடந்து விட்டது எனத் தெரிவித்தார்.
அமெரிக்கா – ஈரான் மத்தியான போர் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்றால் முதலில் ஈரானின் 7 நிபந்தனைகளை நீக்க வேண்டும், அதன் பின்பு ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்துப் பேசலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்கா – ஈரான் போரில் எவ்விதமான அமைதியும் திரும்ப வாய்ப்பில்லை, இதேவேளையில் சூயஸ் கால்வாய் வாயிலாகச் சவுதியில் இருந்தும், துருக்கி வாயிலாக ஈராக் நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டு உள்ள காரணத்தால் எண்ணெய் சப்ளையில் எவ்விதமான தளரவும் இல்லை. இதனால் கச்சா எண்ணெய் விலை 0.52 சதவீதம் சரிந்து ஒரு பேரல் பிரெண்ட் விலை 101.7 டாலராக உள்ளது.

