• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல்களில் முஜ்தபா கமெனிக்கு காயம்! மறைவின் இரகசிய நிலை

GenevaTimes by GenevaTimes
March 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல்களில் முஜ்தபா கமெனிக்கு காயம்! மறைவின் இரகசிய நிலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானின் புரட்சிகர காவல் படை (Revolutionary Guards) ஆதரவுடன் மோஜ்தபா கமெனி நாட்டின் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று மூத்த ஈரான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



மறைந்த அயத்துல்லா அலி கமெனி போன்றே கடுமையான கொள்கைகளை ஆதரிக்கும் ஒருவராகவே மோஜ்தபா கமெனி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


ஆனால் அவரைவிட எளிதில் கட்டுப்படுத்தக்கூடிய தலைவராக காவல் படை கருதுவதாக கூறப்படுகிறது.

போர் தொடங்கியதிலிருந்து புரட்சிகர காவல் படையின் அதிகாரம் மேலும் அதிகரித்துள்ளது.



இதனால் அரசியல் மற்றும் மத தலைவர்களின் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், அவர்கள் விரைவாக முடிவெடுத்து மோஜ்தபா கமெனிய்யை தேர்வு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிவிப்பில் தாமதம்

 உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகும்,மோஜ்தபா கமெனி சுமார் 48 மணி நேரம் வரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடாதது சிலரிடம் கவலை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்களில் முஜ்தபா கமெனிக்கு காயம்! மறைவின் இரகசிய நிலை | Mojtaba Khamenei Injured In Us Israeli Attacks



தற்போது நடைபெற்று வரும் போரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானியர்கள் உயிரிழந்துள்ளனர்.

மோஜ்தபா அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல்களில் அவரது தந்தை உயிரிழந்த சம்பவத்தின் போது காயமடைந்திருக்கலாம் என்ற வதந்திகளும் பரவி வருகின்றன.



ஒரு ஈரானிய அரசுத் தொலைக்காட்சி “போரில் காயமடைந்த வீரர்” என்று குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதனை சர்வதேச ஊடகங்களும் மேற்கோள் காட்டியுள்ளன.


ஈரானின் அரசியல் அமைப்பில் அதிகாரம் பெரும்பாலும் புரட்சிகர காவல் படையும் உச்ச தலைவரின் அலுவலகமான “பெய்த் (Beyt)” என்பதிலும் இருக்கிறது.



புதிய தலைவரின் தேர்வில் காவல் படையின் செல்வாக்கு மிக அதிகமாக இருந்ததாக வட்டாரங்கள் கூறுகின்றன.



அரசியல் அழுத்தம்

உச்ச தலைவர் தேர்வு செய்வது அரசியலமைப்பின் படி 88 உறுப்பினர்கள் கொண்ட Assembly of Experts அமைப்பின் பொறுப்பு.



ஆனால் இந்த முறை கூட்டம் நடத்தப்பட்ட இடமே பாதுகாப்பு காரணங்களால் இரகசியமாக வைக்கப்பட்டது.

சில உறுப்பினர்கள் கூட கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.


கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சுமார் 85% முதல் 90% வரை உறுப்பினர்கள் மோஜ்தபாவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில அயத்துல்லாக்கள் இந்த தேர்வை எதிர்த்ததாக கூறப்படுகிறது.

காரணம், இது ஒரு வம்சாவளி (hereditary) அதிகார மாற்றம் போல தோன்றுகிறது என்பதுதான்.

இது ஈரானின் பொதுமக்களிடையே ஏற்கனவே குறைந்துள்ள ஆதரவை மேலும் பாதிக்கக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.


அரசியல் வட்டாரங்களில் சிலர், இந்த புதிய தலைமையால் ஈரான் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கொள்கைகளில் மேலும் கடுமையான நிலைப்பாடு எடுக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.



புரட்சிகர காவல் படை பல ஆண்டுகளாக விரும்பிய முழு அதிகாரத்தையும் இப்போது பெற்றிருக்கலாம் என்று ஒரு முன்னாள் அதிகாரி கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

உள்நாட்டுப் பொருளாதாரத்தின் வலிமையால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் மதிப்பு மாற்றம் இன்றி நீடிக்கிறது | Makkal Osai

Next Post

போர் எதிரொலி.. 4 லட்சம் டன் பாஸ்மதி அரிசி தேக்கம்.. இந்தியாவில் வர்த்தகம் பாதிப்பு..! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
போர் எதிரொலி.. 4 லட்சம் டன் பாஸ்மதி அரிசி தேக்கம்.. இந்தியாவில் வர்த்தகம் பாதிப்பு..! | India News (இந்தியா செய்திகள்)

போர் எதிரொலி.. 4 லட்சம் டன் பாஸ்மதி அரிசி தேக்கம்.. இந்தியாவில் வர்த்தகம் பாதிப்பு..! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin