அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரையும் இரட்டைச் சிறுவர்கள் எனக் குறிப்பிட்டு ஈரான் தரப்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய ஆயுதப் படைகளின் மூத்த பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் அபோல்ஃபாஸ்ல் ஷேகார்ச்சி (Brigadier-General Abolfazl Shekarchi) இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, அவர்கள் இருவரும் வீழ்ச்சியை நோக்கிய பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் பீளுரைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் அவர்கள் சிக்கியுள்ள மரணச் சதுப்பில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பொருளாதாரத் தொண்டை
சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ட்ரம்ப் மற்றும் நெதன்யாகுவை இலக்கு வைத்து உரையாற்றிய ஷேகார்ச்சி, அவர்கள் இருவரும் பிராந்தியத்தை அழிவை நோக்கித் தள்ளிவிட்டு தற்போது அதிலிருந்து தப்ப முடியாமல் தவித்து வருவதாகச் சாடியுள்ளார்.
ஈரானிடம் உள்ள இராணுவ மற்றும் மூலோபாய ஆற்றலைக் கொண்டு அமெரிக்காவின் ஆற்றல் விநியோக வழித்தடங்களை முடக்கி அதன் பொருளாதாரத் தொண்டையை நெரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் நகர்வுகள் மூலம் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு மேலும் பல அதிர்ச்சிகள் காத்திருப்பதாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

