Last Updated:
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கால்வெஸ்டன் அருகே கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம் விழுந்து நொறுங்கியது.
அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே கடல் பகுதியில் மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில், தீவிபத்தில் காயமடைந்த மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த சிறுவன் உட்பட 4 பேரும், நான்கு கடற்படை வீரர்களும் பயணம் மேற்கொண்டனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கால்வெஸ்டன் அருகே கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம் விழுந்து நொறுங்கியது.
உடனடியாக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இரண்டு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன நபரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.