அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தெற்கு கரோலினா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என இரண்டு கட்சிகளில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாகாணமாக வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
குடியரசுக் கட்சியைப் பொறுத்தவரை முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். இந்நிலையில், ஜனநாயக கட்சியின் முதல் வாக்கெடுப்பு தெற்கு கரோலினாவில் நடைபெற்றது. இதில் அதிபர் பைடனை எதிர்த்து டீன் ஃபிலிப்ஸ், மரியேன் வில்லியம்சன் ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கெடுப்பை தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பைடன் 97 சதவிகித வாக்குகளைப் பெற்ற நிலையில், அவர் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து பேசிய அதிபர் பைடன், தெற்கு கரோலினா தங்கள் பிரசாரத்துக்கு புத்துணர்ச்சி ஊட்டியுள்ள நிலையில், 2020ஆம் ஆண்டை போல் 2024ஆம் ஆண்டிலும் குடியரசுக் கட்சியின் போட்டியாளரான டொனால்ட் டிரம்பை தோல்வி அடைய செய்வேன் என்று உறுதி பூண்டார்.
கறுப்பின வாக்காளர்கள் மத்தியில் தனது ஆதரவை நிரூபிக்கும் களமாக தெற்கு கரோலினாவை பைடன் கருதுவதாக கூறப்படுகிறது. பைடனின் இரண்டாம் முறை போட்டியில் திருப்தி இல்லை என்றாலும் டிரம்ப் வெற்றி பெறுவதை விரும்பவில்லை என வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
