Last Updated:
சுற்றுச்சூழல் நலன் அடிப்படையில் நிலக்கரி உபயோகத்தைக் குறைக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன
சர்வதேச அளவில் வர்த்தகப் போட்டிகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் சீனாவும் அமெரிக்காவும் மாறி மாறி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரிகளை அதிகரித்தன.
மேலும் உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஈரான் பிரச்சனை உள்ளிட்டவை காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் பொருளாதாரம் நிலையற்ற தன்மை உடையதாக இருந்தது. இந்த நிலையில் தற்போது நிலக்கரி உற்பத்தி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியா ஆண்டு ஒன்றுக்கு 1,085 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. அந்த வகையில் இந்தியா அமெரிக்கா, இந்தோனேசியா, துருக்கி உள்ளிட்ட நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடுகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. சீனாவை பொறுத்த அளவில் 4,780 மில்லியன் டன் அளவுக்கு நிலக்கரியை உற்பத்தி செய்திருக்கிறது. சீனாவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு எரிசக்தி தேவை அதிகம் உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள சுரங்கங்களில் அதிக அளவு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் அதிக அளவு நிலக்கரியை வெட்டி எடுக்கும் நாடாக சீனா மாறி உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. மூன்றாவது இடத்தில் இந்தோனேஷியா உள்ளது. அங்கு ஆண்டு ஒன்றுக்கு 836 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. அமெரிக்காவில் 464 மில்லியன் டன் நிலக்கரியும், ஆஸ்திரேலியாவில் 462 மில்லியன் டன் நிலக்கரியும், ரஷ்யாவில் 427 மில்லியன் டன் நிலக்கரியும் வெட்டி எடுக்கப்படுகின்றன.
சுற்றுச்சூழல் நலன் அடிப்படையில் நிலக்கரி உபயோகத்தைக் குறைக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக சுற்றுச்சூழலை மாசு படுத்தாத பொருட்களால் எரிசக்தியை உருவாக்குவதற்கு பல்வேறு நாடுகளின் அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் எரிசக்தி துறையில் நிலக்கரி உடைய தேவை தற்போது வரை தவிர்க்க முடியாத அளவில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
July 26, 2025 12:56 PM IST
அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி 2-ஆவது இடம்பிடித்த இந்தியா… எந்தத் துறையில் தெரியுமா?