அமெரிக்காவில் 1800 இற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவை, டெவின் என்ற குளிர்காலப் புயல் தாக்கியதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 54 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்தது.
கடும் அவதி
இதனால் அம்மாகாணம் வெள்ளக்காடாக மாறியதுடன் வெள்ளப்பெருக்குடன் பல இடங்களில் சேறும் ஆறுபோல பாய்ந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தநிலையில், நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாணங்களை டெவின் என்ற குளிர்கால புயல் தாக்கியுள்ளது.

இதனால் கனமழையும் மற்றும் கடும் பனிப்பொழிவும் இருந்து வருகின்றது.
இதையடுத்து நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வானிலை மோசமடைந்ததால் 1800 இற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன் 6883 விமானங்கள் தாமதமாக புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

