Last Updated:
சமீபத்தில் நடந்த போராட்டத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமெனி தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டில் பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதார சூழ்நிலை உள்ளிட்டவை காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு அரசுக்கு எதிராக கடந்த மாதம் (டிசம்பர் 2025) இறுதியில் நாடு தழுவிய போராட்டம் வெடித்தது. பல இடங்களில் இந்தப் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் பலர் உயிரிழந்தனர்.
3,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பேசிய அந்நாட்டு தலைவர் கமேனி, நாடு முழுவதும் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததை ஒப்புக்கொண்டார். பல இடங்களில் மனிதத்தன்மையற்ற செயல்கள் நடந்ததாக குறிப்பிட்டுள்ள கமேனி, இதற்கு அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் செயல்பாடுகளே காரணம் என்றும் கூறினார்.
Iran’s Supreme Leader Ayatollah Ali Khamenei has accused President Donald Trump and the US of being behind the deaths of ‘several thousand’ people during weeks of anti-government protests, alleging direct foreign involvement in the violence. pic.twitter.com/kdGRBHBZuC
— Al Jazeera English (@AJEnglish) January 18, 2026
போராட்டம் நடத்தியவர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஊக்குவிப்பதாகவும் கமேனி குற்றம்சாட்டினார். போராட்டக்காரர்கள் மீது ஈரான் பாதுகாப்பு படையும் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் கமேனி தனது உரையில் அதுகுறித்து எந்த தகவலையும் கூறவில்லை. எனினும், முதன்முறையாக நாட்டில் நடந்த உயிரிழப்புகள் தொடர்பாக ஈரான் தலைவர் வெளிப்படையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
“அமெரிக்காவும் பிற நாடுகளுமே காரணம்” – உயிரிழப்புகள் குறித்து ஈரான் அதிபர் சொன்ன அதிர்ச்சி தகவல்கள்!


