Last Updated:
அமெரிக்கா ஒப்பந்தம் விவசாயிகள் பாதிக்காது என சிவராஜ் சிங் சவுஹான் உறுதிபடக் கூறினார்.
அமெரிக்கா உடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தால், இந்திய விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் உறுதி அளித்துள்ளார்.
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியாவில் வரி விதிக்கப்படாது என்றும் அந்நாட்டு அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அண்மையில் பதிவிட்டு இருந்தார்.
இதனால், அமெரிக்க வேளாண் பொருட்கள் மிகக் குறைந்த விலையில் இந்தியாவிற்குள் நுழையும் என்பதால், உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டது.
இந்நிலையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தால், இந்திய விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் உறுதி அளித்துள்ளார்.
இந்திய விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் என்று கூறிய சிவராஜ் சிங் சவுஹான், சிறு தானியங்கள், பழங்கள் மற்றும் பால் பொருட்களின் வர்த்தகத்திற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியப் பொருட்கள் மீதான வரிக் குறைப்பால், அரிசி, பருத்தி, பின்னலாடை பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு செய்யும் தொண்டே, இறைவனுக்கு ஆற்றும் தொண்டு என்று குறிப்பிட்டுள்ள சிவராஜ் சிங் சவுஹான், விவசாயிகளின் நலனில் ஒருபோதும் மோடி அரசு சமரசம் செய்யாது என்று உறுதிபடக் கூறினார்.
“அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம்; இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது” – அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான்


