ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, வியாழக்கிழமையன்று தனது ரஷ்ய சகா செர்ஜி லாவ்ரோவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இந்த உரையாடலில், அமெரிக்காவுடனான ஈரானின் போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணையின் தற்போதைய நிலை குறித்து இரு அதிகாரிகளும் கலந்துரையாடியுள்ளனர்.
அத்தோடு, லெபனான் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது உறுதிப்பாட்டை நிலைநிறுத்த வேண்டிய அமெரிக்காவின் பொறுப்பை அராக்சி அதன்போது வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை
அதன்படி, அமெரிக்கா தனது உறுதிமொழிகளைக் கடைப்பிடித்தால் ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான பயணம் சாத்தியமாகும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், நீரிணையை மீண்டும் திறப்பதற்காக அமெரிக்கா முன்மொழிந்த நியாயமற்ற மற்றும் ஒருதலைப்பட்சமான தீர்மானம் என்று அவர் குறிப்பிட்டதை, ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷ்யா வீட்டோ செய்ததற்காக லாவ்ரோவுக்கு அராக்சி பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
