தெற்கு ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வருந்தத்தக்க பதிலடியை ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC) தொடங்கியுள்ளதாக ஈரானிய அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் வாழும் பகுதிகள் உட்பட பல இடங்கள் மீது அமெரிக்கா கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக IRGC தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
இதன்போது, சிரிக் மலைப்பகுதியில் நடந்த ஒரு திருமண விழாவில் மேற்கொள்ப்பட்டுள்ள அமெரிக்கத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹோர்முஸ் நீரிணையின் முற்றுகை
இந்நிலையில், குறித்த தாக்குதல்கள் ஹோர்முஸ் நீரிணையின் முற்றுகையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அங்கு தலையிடும் வெளிநாட்டுப் படைகளை ஒடுக்குவதற்கான உறுதியை வலுப்படுத்தியுள்ளதாகவும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

Image Credit: thenewregion
இதன்படி, இந்த பதிலடி நடவடிக்கையின் முதல் கட்டமாக, புதிய விண்வெளி பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான 50-வது மேம்பட்ட MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் IRGC தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

