உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும். அமெரிக்கா வெற்றி பெற்றால், அந்த அணி சூப்பர் 8க்கு செல்லும். பாகிஸ்தான் இந்த தொடரிலிருந்து வெளியேறி விடும்.
இதனால் இந்த ஆட்டம் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்கள்-
ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்
அமெரிக்கா அணி-
ஸ்டீவன் டெய்லர், ஷயான் ஜஹாங்கீர், ஆண்ட்ரீஸ் கவுஸ்(விக்கெட் கீப்பர்), ஆரோன் ஜோன்ஸ்(கேப்டன்), நிதிஷ் குமார், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், ஷாட்லி வான் ஷால்க்விக், ஜஸ்தீப் சிங், சவுரப் நேத்ரவல்கர், அலி கான்
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா 2 போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று 4 புள்ளிகள் மற்றும் +1.455 நெட் ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவும் 2 போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று 0.626 நெட் ரன் ரேட்டுடன் 2 ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று +0.191 ரன் ரேட்டுடன் 3 ஆம் இடத்திலும் உள்ளன.
இன்றைய ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தால் முதல் அணியாக அமெரிக்கா சூப்பர் 8க்குள் நுழையும். அத்துடன் பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறும்.
இதேபோன்று இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால், சூப்பர் 8 சுற்றை உறுதி செய்து விடும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)