• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும்.. ஈரான் போட்ட புதிய ஸ்கெட்ச்! ஹார்முஸ்-ல் வெடிக்கும் புதிய பிரச்சனை! | Iran Parliament Reviews Ban on US & Israeli Ships in Hormuz with 20% Cargo Fine

GenevaTimes by GenevaTimes
August 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும்.. ஈரான் போட்ட புதிய ஸ்கெட்ச்! ஹார்முஸ்-ல் வெடிக்கும் புதிய பிரச்சனை! | Iran Parliament Reviews Ban on US & Israeli Ships in Hormuz with 20% Cargo Fine
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும்.. ஈரான் போட்ட புதிய ஸ்கெட்ச்! ஹார்முஸ்-ல் வெடிக்கும் புதிய பிரச்சனை!

உலக நாடுகளின் பொருளாதாரத்தை அச்சுறுத்தி வரும் அமெரிக்கா – ஈரான் மத்தியிலான போர் அடுத்தடுத்து முக்கிய கட்டத்தை எட்டி வரும் வேளையில், இப்போது போரை முழுமையாக நிறுத்திவிட்டு அமைதிக்கு திரும்பமும் முயற்சியில் ஓமன் நாட்டின் வாயிலாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஈரான் நாட்டின் நாடாளுமன்ற கமிட்டி, ஹார்முஸ் வாயிலாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இதர எதிரி நாடுகளின் கப்பல்கள் வருவதற்கு தடை விதிக்கும் முக்கிய மசோதாவை நிறைவேற்றுதற்காக ஆய்வு செய்து வருகிறது என ஃபார்ஸ் செய்தியில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும்.. ஈரான் போட்ட புதிய ஸ்கெட்ச்! ஹார்முஸ்-ல் வெடிக்கும் புதிய பிரச்சனை!

இந்த தடையை மீறி ஹார்முஸ் வழியாக பெர்சியன் வளைகுடாவுக்குள் செல்லும் கப்பல்களுக்கு, அதன் சரக்கு மதிப்பில் சுமார் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் ஈரான் நாடாளுமன்ற குழு உருவாக்கியுள்ள இந்த மசோதாவை நிபுணர்கள் ஆய்வு செய்து அதன் பின்பே ஒப்புதலுக்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போர் நிறுத்தம், ஹார்முஸ் நீரிணை திறப்பிற்காக ஈரான் – ஓமன் மத்தியிலான பேச்சுவார்த்தையில் கப்பல்கள் எந்த வழித்தடத்தில் செல்ல வேண்டும் என்பது குறித்து முடிவுகளை செய்துள்ள நிலையில், விரைவில் இதற்கான அறிவிப்பை இரு நாடுகளும் இணைந்து அறிவிக்க தயாராகியிருக்கும் வேளையில் ஈரான் அரசு 20 சதவீதம் அபராதம் விதிக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளது.

மேலும் ஈரான் வளைகுடா பகுதியில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் முக்கியமான வார்னிங் கொடுத்துள்ளது. அமெரிக்கா ஈரான் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தினால் வளைகுடாவில் இருக்கும் அனைத்து நாடுகளின் முக்கிய எரிபொருள் கட்டமைப்பு மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

நேற்று வெளியான தகவல் படி ஓமன் வாயிலாக நடைபெறும் பேச்சுவார்த்தை ஆரோக்கியமாக முன்னேறி வருவதாகவும், விரைவில் ஹார்முஸ் முழுமையாக திறப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் ஹார்முஸ் வழியாக செல்லும் அனைத்து சரக்கு கப்பல்களுக்கும் 7 சதவீதம் கட்டணம் விதிக்கப்பட ஈரான் கோரிக்கை வைத்த நிலையில் ஓமன் இதை 3 சதவீதமாக குறைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தது. ஈரான் கூறியப்படி 7 சதவீதம் கட்டணம் விதித்தால் வருடத்திற்கு 100 பில்லியன் டாலர் அளவிலான வருமானம் ஈரானுக்கு கடைக்கும், நேற்றைய அறிவிப்பிலேயே இந்த கட்டணம் சீனா மற்றும் ரஷ்ய கப்பல்களுக்க இல்லை என அறிவித்த ஈரான் அரசு.

இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்கு மொத்தமாக தடை விதிக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

Share This Article

English summary

Iran Parliament Reviews Ban on US & Israeli Ships in Hormuz with 20% Cargo Fine

Iran Parliament Reviews Ban on US & Israeli Ships in Hormuz with 20% Cargo Fine — அமெரிக்க, இஸ்ரேல் கப்பல்களுக்கு தடை போட்டும் ஈரான்.. வெடிக்கும் புதிய பிரச்சனை!

Story first published: Friday, August 7, 2026, 12:14 [IST]

Read More

Previous Post

ருதுராஜ்-க்கு விடிவுகாலம் வருமா.. சாய் சுதர்சனுக்கு மாற்று வீரர் யார்? பிசிசிஐ எடுக்கும் முடிவு! | Will Ruturaj Gaikwad Replace Injured Sai Sudharsan in India’s Test Squad Against Sri Lanka?

Next Post

சில்க் தொழிற்பேட்டையில் மாசு: 4 தொழிற்சாலைகள் உடனடி மூடல் | Makkal Osai

Next Post
சில்க் தொழிற்பேட்டையில் மாசு: 4 தொழிற்சாலைகள் உடனடி மூடல் | Makkal Osai

சில்க் தொழிற்பேட்டையில் மாசு: 4 தொழிற்சாலைகள் உடனடி மூடல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin