அமெரிக்காவில் மேலும் 74 ஆயிரம் பேரின் கல்விக்கடனை ரத்து செய்து அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் தற்போது 4 கோடியே 34 லட்சம் பேரின் கல்விக்கடன் நிலுவையில் இருப்பதாகவும்,
இது இந்திய மதிப்பில் சுமார் 135 லட்சம் கோடி ரூபாய் எனவும் கூறப்படுகிறது. சமீப காலமாக கல்விக் கடனை செலுத்துவதில் சுணக்கம் இருக்கும் நிலையில், கல்விக் கடனை ரத்து செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இந்திய மதிப்பில் சுமார் 41 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு 74 ஆயிரம் பேரின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுவதாக ஜோ பைடன்அறிவித்துள்ளார். ஆசிரியர்கள், செவிலியர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட மக்களுக்கான சேவைப் பணிகளில் இருப்போர் இந்த கடன் தள்ளுபடிக்கு தகுதி பெற்றவர்கள் எனவும், இந்த துறைகளில் முழு நேர பணியாளர்களாக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Today, my administration approved debt cancellation for another 74,000 student loan borrowers.
This brings the total number of people who have gotten their debt canceled under my administration to over 3.7 million Americans. pic.twitter.com/M7tsd73rYd
— Joe Biden (@JoeBiden) January 19, 2024
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் 74 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேரின் கல்வி கடன்களை ரத்து செய்து அதிபர் பைடன் உத்தரவிட்டிருந்தார். அதன்பின் டிசம்பர் மாதம் 80 ஆயிரத்து 300 பேரின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்பட்டன. அந்த வரிசையில் தற்போது மேலும் 74 ஆயிரம் பேரின் கல்வி கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதிபர் ஜோ பைடன் தனது தேர்தல் வாக்குறுதியாக கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…