அமெரிக்காவில் (United States) வாகன விபத்தில் சிக்கி இந்திய மாணவர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் 5 இந்திய மாணவர்கள் சென்ற கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா, அன்வி சர்மா ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம்
மேலும் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் நடத்தி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

