• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்காவில் திருடியதாக பிடிபட்ட இந்திய பெண்.. வீடியோ வெளியாகி பரபரப்பு! | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
அமெரிக்காவில் திருடியதாக பிடிபட்ட இந்திய பெண்.. வீடியோ வெளியாகி பரபரப்பு! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 04, 2025 10:30 AM IST

இந்த வீடியோவானது இன்ஸ்டாகிராமில் biosaga.in என்ற கணக்கில் இருந்து பதிவிடப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் திருடியதாக பிடிபட்ட இந்திய பெண்
அமெரிக்காவில் திருடியதாக பிடிபட்ட இந்திய பெண்

அமெரிக்காவில் உள்ள ஒரு ஷாப்பிங் வளாகத்தில் திருடியதாக இந்தியப் பெண் ஒருவர் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது. அவர் அழுதுகொண்டு போலீசாரிடம் கெஞ்சும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ நெட்டிசன்களிடையே பெரும் சீற்றத்தைத் தூண்டியது. காணொளியில், இந்தியப் பெண் அதிகாரிகளிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்பதைக் காணலாம். அப்போது, ​​தான் அறியாமல் பொருட்களுக்குப் பணம் செலுத்தத் தவறிவிட்டதாக அவர் கூறுவதையும் நாம் கேட்கலாம்.

இந்த வழக்கில், அமெரிக்காவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் கையும் களவுமாகத் திருடும்போது பிடிபட்டதாகவும், போலீசார் வந்தபோது, ​​அவர் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் கேட்கவில்லை. இந்த வீடியோ வெளியான பிறகு, இந்தப் பெண் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய முடியுமா என்று மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் நடந்தது.

ஒரு இளம் பெண் கடையில் ஷாப்பிங் சென்றுள்ளார். ஆரம்பத்தில், எல்லாம் சாதாரணமாகத் தெரிந்தது. இருப்பினும், பில்லிங் கவுண்டரில் பல பொருட்களை ஸ்கேன் செய்ய அப்பெண் தவறிவிட்டதை சிசிடிவி காட்சிகள் காட்டின. இதனையடுத்து கடையின் கண்காணிப்பு குழுவினர் ஏதோ தவறு இருப்பதாக சந்தேகித்தபோது, ​​அவர்கள் உடனடியாக சிசிடிவி காட்சிகளை சரிபார்த்துள்ளனர். அந்த பெண் வேண்டுமென்றே சில பொருட்களுக்குப் பணம் செலுத்தவில்லை என்பது கேமராவில் தெளிவாகத் தெரிந்தது. பணம் கொடுக்காமல் அவர் வெளியேற முயன்றபோது, ​​ஒரு பாதுகாவலர் அவரைத் தடுத்து, அவருடைய பையை சோதனையிட்டனர், அதில் பணம் செலுத்தப்படாத பல பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து கடை மேனேஜர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அந்த வீடியோவில், கைவிலங்கு போடச் சொல்லும் காவல்துறையினரின் காட்சிகள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. இதைக் கேட்டதும், அந்த பெண் பதறிப்போய், கைகளைக் கூப்பி அழத் தொடங்குகிறார். மேலும் அந்த பெண் திரும்பத் திரும்ப, “சார், நான் பணம் கட்ட மறந்துவிட்டேன். நான் உடனே பணம் கட்டிடுவேன்” என்று கூறுகிறார். ஆனால் போலீசார் அவரது பேச்சைக் கேட்கவில்லை.

காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஃபார்மாலிட்டிஸ் முடித்த பிறகு விடுவிக்கப்படுவீர்கள் என்றும், அதற்கு சில மணிநேரம் ஆகும் என்றும் போலீசார் அந்த பெண்ணிடம் கூறினர். பின்னர் அந்த பெண் தனது கணவரை அழைக்குமாறு கேட்டார், ஆனால் போலீசார் மறுத்துவிட்டனர். இதற்கிடையில் அவர் கடையில் இருந்து என்ன எடுத்துச் சென்றார் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த வீடியோவானது இன்ஸ்டாகிராமில் biosaga.in என்ற கணக்கில் இருந்து பதிவிடப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பல நெட்டிசன்கள் அவரது நடத்தையை “வெட்கக்கேடானது” என்று விமர்சித்தனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் நற்பெயரைப் பாதிக்கின்றன என்றும் கூறினர். சிலர் “விதிகள் அனைவருக்கும் பொருந்தும்” என்றும் கூறினர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 04, 2025 10:30 AM IST

Read More

Previous Post

இந்தியாவில் எத்தனை லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம் இருக்கிறது தெரியுமா?

Next Post

மலேசியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல – பிரதமர் அன்வார் | Makkal Osai

Next Post
மலேசியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல – பிரதமர் அன்வார் | Makkal Osai

மலேசியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல - பிரதமர் அன்வார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin