Last Updated:
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி காரணமாக 10 குழந்தைகள் உயிரிழந்ததாக Vinay Prasad தகவல்; Robert Kennedy 65 வயதுக்கு மேல் மட்டுமே தடுப்பூசி உத்தரவு பிறப்பித்தார்.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் 10 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பூசி தொடர்பாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தலைமை மருத்துவ அதிகாரி வினய் பிரசாத் சக ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இதயத்தசை அழற்சி மற்றும் இதய வீக்கம் காரணமாக 10 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும், இதற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதே காரணமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பூசியால் அமெரிக்காவில் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் குழந்தைகள் உயிரிழந்ததற்கு காரணமாகக் கூறப்படும் தடுப்பூசியின் பெயர் அதை தயாரித்த நிறுவனத்தின் பெயர், உயிரிழந்த குழந்தைகளின் வயது உள்ளிட்ட எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே, அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி கொள்கைகளில் அதிரடி மாற்றங்கள் செய்து அந்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் ராபர்ட் கென்னடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கொரோனா தடுப்பூசியை 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் செலுத்த வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
November 30, 2025 11:31 AM IST


