• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்காவில் கையில் வாளுடன் சுற்றிய சீக்கியர்… சுட்டுக் கொன்ற போலீசார்… அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவத்தின் பின்னணி என்ன? | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்காவில் கையில் வாளுடன் சுற்றிய சீக்கியர்… சுட்டுக் கொன்ற போலீசார்… அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவத்தின் பின்னணி என்ன? | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பட்டப்பகலில் கையில் வாளை ஏந்தி சுழற்றிய சீக்கிய நபர், அமெரிக்க போலீசார் சுற்றி வளைக்க காரில் தப்பிக்க முயன்றுள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் அமெரிக்க போலீசாரால் அவர் நடு ரோட்டில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த 36 வயதான குர்ப்ரீத் சிங் என்பவர், கடந்த13ஆம் தேதி அமெரிக்காவின் லாஞ் ஏஞ்சல்ஸில் உள்ள க்ரிப்டோ காம் அரேனா எனும் பகுதியில் கையில் வாளுடன் சம்பவம் செய்துள்ளார்.

காரில் வந்தவர் வாகனத்தை ஓரங்கட்டி விட்டு, சீக்கியர்கள் பயன்படுத்தக்கூடிய கண்டா எனப்படும் இருமுனை கூர் வாளுடன் சாலையில் இறங்கி… வாளை சுழற்ற ஆரம்பித்தார். சிக்னல் அருகே உள்ள சாலை நடுவே.. கட்கா எனப்படும் சீக்கியர்களின் தற்காப்புக் கலை வித்தைகளைச் செய்துள்ளார்.

வாளை காற்றில் மின்னல் வேகத்தில் சுழற்றி, சாலையில் கோடு போட்ட குர்ப்ரீத் சிங்கின் செயலால் கண்டு அமெரிக்கர்கள் அச்சத்தில் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் லோகேஷனை ட்ராக் செய்த அமெரிக்க அதிரடிப் படையினர் குர்ப்ரீத் சிங்கை சுற்றி வளைத்தனர்.

கையில் இருக்கும் வாளை கீழே போட்டு விட்டு சரணடையக் கூறி குர்ப்ரீத் சிங்கிடம் வலியுறுத்தினர். ஆனால் குர்ப்தீப் காரில் ஏறி ஒரு கையில் ஸ்டியரிங்கை பிடித்து ஓட்டிக்கொண்டே மறுகையில் வாளை வெளியே நீட்டிக்கொண்டு போலீசாரை பார்த்து மீண்டும் சுழற்றியுள்ளார்.

அதற்குள் மற்றொரு படையினரும் அங்கு வர குர்ப்தீப் சிங்கின் காரை நாலாபுறமும் மடக்கினர். அப்போது போலீசாரின் கார் மோதிய குர்ப்தீப் சிங் கடும் ஆவேசத்துடன் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் காரை நிறுத்தி கீழிறங்கியவர், வாளுடன் போலீசாரை நோக்கி வேகமாக ஓடி வந்துள்ளார்.

அவ்வளவுதான்! எல்லாம் முடிந்து விட்டது! அமெரிக்க போலீசார், சீக்கியர் குர்ப்தீப்பின் உடலில் அடுத்தடுத்து துப்பாக்கியால் சுட்டனர். அதில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த குர்ப்தீப், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பட்டப்பகலில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன், போலீசாரை வாளால் வெட்ட முயன்றதால் தற்காப்பிற்காகத் துப்பாக்கியால் சுட்டதாக அமெரிக்க போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட குர்ப்தீப், பஞ்சாபி மரபுக் கலைகளில் கைதேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

குறிப்பாக சீக்கிய சமூகத்தின் பாரம்பரிய யுத்தக்கலையான கட்காவைக் காட்சிப்படுத்துவதில் வித்தைக்காரர் என கூறுகின்றனர். பட்டப்பகலில், பொது இடத்தில் இது போன்று ஆயுதத்துடன் எல்லைமீறியது தண்டனைக்குரியதுதான் என ஒரு தரப்பினர் கூற, பாரம்பரிய கலைகளை அரங்கேற்றிய சீக்கியரை இப்படியா அநியாயமாக சுட்டு கொல்வதா? என மற்றொரு தரப்பினர் ஆதங்கத்தையும் வெடி காட்ட வருகின்றனர்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 31, 2025 7:38 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

அமெரிக்காவில் கையில் வாளுடன் சுற்றிய சீக்கியர்… சுட்டுக் கொன்ற போலீசார்… அதிர்வலைகளை ஏற்புடத

Read More

Previous Post

பிஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: மனுக்கள் மீது நாளை விசாரணை | Bihar voter list revision Hearing on petitions tomorrow

Next Post

அனைத்து மலேசியர்களுக்கும் தேசபக்தியை வெளிப்படுத்த இடம் கொடுக்கப்பட வேண்டும்: ஜாஹிட் – Malaysiakini

Next Post
அனைத்து மலேசியர்களுக்கும் தேசபக்தியை வெளிப்படுத்த இடம் கொடுக்கப்பட வேண்டும்: ஜாஹிட் – Malaysiakini

அனைத்து மலேசியர்களுக்கும் தேசபக்தியை வெளிப்படுத்த இடம் கொடுக்கப்பட வேண்டும்: ஜாஹிட் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin