அமெரிக்காவில் பயிற்சி போட்டியின் போது மைதானத்தில் அத்துமீறி கேப்டன் ரோகித் சர்மாவை பிடித்த ரசிகரை அமெரிக்க காவலர்கள் கைது செய்தனர்.
டி20 உலகக்கோப்பைத் தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய அணி,நியூயார்க் நகரில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போது, ரசிகர் ஒருவர் திடீரென பாதுகாப்பு விதிகளை மீறி மைதானத்தின் உள்ளே நுழைந்தார். கேப்டன் ரோகித் சர்மாவை நோக்கி ஓடிய அந்த நபர், அவரை பிடித்து கட்டிப்பிடிக்க முயன்றார். உடனே மைதானத்தில் நுழைந்த அமெரிக்க போலீசார், அந்த ரசிகரை கீழே தள்ளி அவரது இரண்டு கைகளையும் பின்னால் கட்டி கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது இது போன்ற அத்துமீறல் சம்பவங்கள் நடைபெற்றன. குறிப்பாக தோனி மற்றும் விராட் கோலி ரசிகர்கள் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்.
The fan who breached the field and hugged Rohit Sharma was taken down by the USA police.
– Rohit requested the officers to go easy on them.#T20WorldCup#INDvsBAN pic.twitter.com/bWJULv9iur
— ARVIND SINGH RAJPUROHIT (@avrajpurohit108) June 1, 2024
இதே போன்ற சம்பவம் அமெரிக்காவிலும் தற்போது நடந்திருக்கிறது. இதற்கிடையே வங்கதேச அணியுடனான பயிற்சி போட்டியில், இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் மேட்சில் வரும் புதன் அன்று அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
