• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்காவின் 50% வரி விதிப்பு | நெருக்கடியில் இருந்து மீண்டு வருவோம்: ஜவுளித் தொழில் அமைப்பினர் நம்பிக்கை | textile industry says will bounce back from US tariffs

GenevaTimes by GenevaTimes
August 28, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு | நெருக்கடியில் இருந்து மீண்டு வருவோம்: ஜவுளித் தொழில் அமைப்பினர் நம்பிக்கை | textile industry says will bounce back from US tariffs
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோவை: ஏற்​றும​தி​யை​விட உள்​நாட்டு ஜவுளி வணி​கம் 3 மடங்கு அதி​கம். எனவே, மத்​திய, மாநில அரசுகள் உதவி​னால், அமெரிக்​கா​வின் வரி நெருக்​கடி​யில் இருந்து மீள்​வோம் என்று ஜவுளித் தொழில் துறை​யினர் நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளனர்.

இது தொடர்​பாக தென்​னிந்​திய மில்​கள் சங்​கத் (சை​மா) தலை​வர் எஸ்​.கே.சுந்​தர​ராமன் கூறும்​போது, “அமெரிக்​கா, இந்​தியா மீது விதித்​துள்ள 50 சதவீத வரி​வி​திப்பு ஏற்​புடையதல்ல. அதிர்ச்​சிகர​மானது. இதனால் ஏற்​பட்​டுள்ள நெருக்​கடியை எதிர்​கொள்​ளத் தேவை​யான நடவடிக்​கைகளை மத்​திய அரசு மேற்​கொள்ள வேண்​டும்.

தொழில் துறை​யினருக்கு நிதி​உத​வி, சலுகைகள், வேறு நாடு​களில் ஏற்​றும​திக்​கான வாய்ப்​பு​களைக் கண்​டறிந்து செயல்பட உதவி செய்​தல் போன்ற நடவடிக்​கைகள் அவசி​ய​மாகும். இந்​தி​யா​வின் மொத்த ஏற்​றும​தியை ஒப்​பிடும்​போது உள்​நாட்டு ஜவுளி வணி​கம் 3 மடங்கு அதி​க​மாகும். தற்​போது நில​வும் பிரச்​சினைக்கு விரை​வில் தீர்வு கிடைக்​கும் என நம்​பு​கிறோம்” என்​றார்.

இந்​திய ஜவுளித் தொழில்​கள் கூட்​டமைப்​பின் (சிட்​டி) முன்​னாள் தலை​வர் ராஜ்கு​மார் கூறும்​போது, “நீண்ட நாள் கோரிக்​கையை ஏற்​று, பருத்​திக்​கான இறக்​குமதி வரி விலக்கு செப். 30 வரை வழங்​கப்​பட்​டது.

இந்த அறி​விப்பு வரவேற்​கத்​தக்​கது என்​றாலும், மிக​வும் குறுகிய கால சலுகை என்​ப​தால், நடை​முறை சிக்​கல்​களை எடுத்​துக்​கூறி, சலுகையை நீட்​டித்து தர வேண்​டும் என்று கோரிக்கை விடுத்​தோம். அதை ஏற்று தற்​போது மத்​திய அரசு டிச. 31 வரை சலுகையை நீட்​டித்து உத்​தர​விட்​டுள்​ளது. இந்​நட​வடிக்கை நூற்​பாலைத்​துறைக்கு மட்​டுமின்​றி, ஆயத்த ஆடை, பின்​னலாடை உள்​ளிட்ட அனைத்து துறை​களுக்​கும் உதவும்” என்​றார்.

மறுசுழற்சி ஜவுளித் தொழில்​கள் கூட்​டமைப்​பின்​(ஆர்​டிஎப்) தலை​வர் ஜெய​பால் கூறும்​போது, “ஜவுளித் தொழில் மட்​டுமின்​றி, அனைத்து துறை​களி​லும் பொருட்​கள் உற்​பத்​திக்​குத் தேவைப்​படும் மூலப் பொருட்​களின் விலை சர்​வ​தேச விலை​யில் கிடைப்​பதை அரசு உறுதி செய்ய வேண்​டும்.

சலுகைகள் வழங்க வேண்டும்: அதே​போல, ஏதேனும் ஒரு துறை பிரச்​சினை​களை எதிர்​கொள்​ளும்​போது, அதை சார்ந்​துள்ள தொழில்​துறை​யினர் நெருக்​கடி​யில் இருந்து மீண்டு வர அரசு தேவை​யான சலுகைகளை வழங்க வேண்​டும். 2022 முதல் ஜவுளித் துறை பல்​வேறு காரணங்​களால் நெருக்​கடி​யில் செயல்​பட்டு வரு​கிறது. எனவே, தற்​போது வெளி​யிடப்​பட்ட அறி​விப்​பு​களால் தற்​காலிக தீர்வு மட்​டுமே கிடைக்​கும். நிரந்​தரத் தீர்வு கிடைக்க அரசு நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும்” என்​றார்.

இந்​திய பருத்தி கூட்​டமைப்பு (ஐசிஎஃப்) தலை​வர் துளசிதரன் கூறும்​போது, “பருத்​திக்​கான இறக்​குமதி வரி விலக்கு தொடர்​பாக மத்​திய அரசின் அறி​விப்பு மிக​வும் வரவேற்​கத்​தக்​கது. மிக​வும் நெருக்​கடி​யான சூழலில் மேற்​கொள்​ளப்​பட்டஇந்​நட​வடிக்கை தொழில்​துறை​யினருக்கு மிக​வும் உதவும்” என்​றார்.

வட்டி மானியம்… தமிழ்​நாடு ஓபன் எண்ட் மில்​கள் சங்​கத் (ஓஸ்​மா) தலை​வர் அருள்​மொழி கூறும்​போது, “அமெரிக்​கா​வின் வரி விதிப்​பால் திருப்​பூர், கரூர் ஏற்​றுமதி ஜவுளித் தொழிலுக்கு கடும் நெருக்​கடி ஏற்​பட்​டுள்​ளது. வங்​கிக் கடனை திருப்​பிச் செலுத்​து​வதற்​கான காலஅவ​காசத்தை நீட்​டித்து வழங்​குதல், மூலப்​பொருட்​கள் வாங்​கு​வதற்​கான மூலதனத்​துக்கு 5 சதவீத வட்டி மானி​யம் வழங்​குதல், செயற்கை இழை இறக்​கும​திக்கு விதிக்​கப்​பட்​டுள்ள தரக்​கட்​டுப்​பாடு​களை நீக்​குதல் போன்ற நடவடிக்​கைகளை மத்​திய அரசு மேற்​கொள்ள வேண்​டும். தமிழக அரசு மின் கட்​ட​ணத்​துக்கு ஒரு யூனிட்​டுக்கு ரூ.2 வரை மானி​யம்​ வழங்​கவேண்​டும்​’’ என்​றார்​.



Read More

Previous Post

“ஹெல்மெட் இல்லன்னா, பெட்ரோல் இல்லை”…! பிரச்சாரத்தை விரைவில் தொடங்கவுள்ள உ.பி.அரசு… | இந்தியா

Next Post

பயனர்களுக்கு வேற லெவல் அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம் | Makkal Osai

Next Post
பயனர்களுக்கு வேற லெவல் அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம் | Makkal Osai

பயனர்களுக்கு வேற லெவல் அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin