Last Updated:
இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஆண்டுத்தோறும் 3 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பை சமாளிக்கும் வகையில், 40 நாடுகளில் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் வகுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 விழுக்காடு வரியால், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் ஜவுளி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு புதிய திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று, ரஷ்யா, ஜெர்மன், பிரான்ஸ், கனடா, மெக்சிகோ, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 40 நாடுகளை இலக்காக வைத்துள்ள இந்தியா, அவற்றில் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க பல்வேறு புதிய திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
அதே சமயம், அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பால், இந்தியாவில் பாசுமதி அரிசிக்கான விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஆண்டுத்தோறும் 3 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பால், இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது அறுவடை காலம் தொடங்கியுள்ள நிலையில், ஏற்கெனவே இருப்பு அதிகமாக இருப்பதால், உள்நாட்டில் விலை குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
August 28, 2025 1:13 PM IST
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு.. 40 நாடுகளில் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம்.. பாசுமதி அரிசி விலை குறைய வாய்ப்பு!


