Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா மற்றும் மெக்சிகோ மீதான 25% இறக்குமதி வரி செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்க பங்குச்சந்தை 2% சரிந்துள்ளது.
கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் மீதான 25 சதவீத இறக்குமதி வரி இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், உலகெங்கிலும் உள்ள நாடுகள் அமெரிக்கா மீது அதிக வரியை விதிப்பதாகவும், அதற்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை கொண்டு வர இருப்பதாகவும் கூறியிருந்தார். அந்த வகையில், கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது செய்தியாளர்கள் முன் பேசிய டிரம்ப், கனடா மற்றும் மெக்சிகோவுக்கு புதிய வரியைத் தவிர்ப்பதற்கு எவ்வித காரணமும் இல்லையெனக் கூறி, செவ்வாய்க்கிழமை முதல் புதிய வரி அமலுக்கு வருவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துள்ள கனட வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, பழிவாங்கும் வரி விதிப்பு முறைக்கு தாங்கள் தயாராக இருப்பதாகக் கூறினார். டிரம்ப் நடவடிக்கையால் வர்த்தகப் போர் அச்சம் எழுந்துள்ளதால், அமெரிக்க பங்குச்சந்தை குறியீடான S அண்ட் P 500 சுமார் 2 சதவீதம் சரிந்துள்ளது.
March 04, 2025 11:57 AM IST
அமெரிக்காவின் புதிய வரி இன்று முதல் அமல்.. அடுத்தடுத்து அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப்


