ஈரானிய வர்த்தகக் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புத் தாக்குதலை ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், அச்செயலை போர்க்குற்றம் என்று குற்றம் சுமத்தியுள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் தொடர்ச்சி என்றும், ஈரான் மீதான ஒரு பரந்த கடல் முற்றுகை மற்றும் பொருளாதாரப் போரின் ஒரு பகுதி என்றும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
வர்த்தகக் கப்பல் போக்குவரத்து
இவை ஐ.நா. சாசனத்தின் மீறல் மற்றும் சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரானின் உள்ள வியூக ஆய்வுகளுக்கான மையத்தின் பகுப்பாய்வாளரான அலி அக்பர் தாரேனி, ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் ஒரு பெரிய பிரச்சினை என்றும், அதற்கு பதிலளிக்காமல் விட்டுவிட ஈரானால் முடியாது என்றும் கூறியுள்ளார்.
இது ஈரானைக் கட்டாயப்படுத்தும் செயல் என்றும் அவரால் கூறப்பட்டுள்ளது. மேலும் கடுமையாகத் தாக்கிப் பதிலடி கொடுக்க இது ஈரானைத் தூண்டுகிறது எனவும் அவரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
