அமெரிக்க இராணுவத்தின் எந்தவொரு தரைவழி படையெடுப்பையும் எதிர்கொள்ள ஈரான் முழுமையாக தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அறிவித்துள்ளார்.
அவர்கள் தாக்கினால் அதனை எதிர்கொள்ள தங்களால் முடியும் என நம்புவதாகவும் அது அவர்களுக்கு ஒரு பேரழிவாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
திறன் கொண்ட படை
முன்னைய போர்களிலிருந்து அனுபவங்கள் உள்ளதால் தற்போது அமெரிக்க படைகளை எதிர்க்கக்கூடிய திறன் கொண்ட படை ஈரானிடம் இருப்பதாகவும் அரக்சி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அமெரிக்காவுடன் போர் நிறுத்தம் அல்லது பேச்சுவார்த்தை நடத்த ஈரான் கோரவில்லை என்றும் அவர்களுடன் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியபோதும், அதற்கிடையே அவர்கள் தாக்குதல் நடத்தியதால் எந்த பேச்சுவார்த்தைக்கும் அவசியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குர்திஷ் படைகளுக்கு ஆயுத உதவி
இதேவேளை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) ஈரானில் கிளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் குர்திஷ் படைகளுக்கு ஆயுத உதவி வழங்க முயற்சி செய்து வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image Credit: CNN
இவ்வாறானதொரு பின்னணியில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி கடந்த வாரம் கொல்லப்பட்டார்.
இருப்பினும், நாட்டின் அரசியல் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், புதிய தலைமை விரைவில் நியமிக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

