அமெரிக்கா- ஈரான் யுத்தத்தில் ஹோர்முஸ் நீரிணையை மூடுவது,வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்களை மாறி மாறி தாக்கி அழிப்பது,வளைகுடா நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான நிரந்த முறுகல் நிலை தொடர்வது,எல்லாமே அமெரிக்காவின் திட்டமிட்ட சதி என சதிக்கோட்பாடு கூறுகிறது.
ஈரான் மீதான யுத்தத்தை ட்ரம்ப் ஆரம்பிக்க முன்னர் அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார் அதில் குறிப்பாக ரஷ்யாவுடன் சமரச பேச்சு, வெனிசுலா ஜனாதிபதி சிறைபிடிப்பு,கனடாவை 51 ஆவது அமெரிக்க மாநிலமாக மாற்ற முயற்சி, கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கப்போவதாக மிரட்டல் மற்றும் நட்பு நாடுகளுடன் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை பகைத்தார்.
இப்படி ட்ரம்பின் செயற்பாடு தன்னிச்சையாக அமைந்தது.
அமெரிக்காவை பொறுத்தவரை சமாதான பேச்சுவார்த்தை என்பதற்கு சமாதான பொறி என்பதே அர்த்தமாகும்.
அமெரிக்காவின் இதுபோன்ற சமாதான பொறிக்குள் ஈரான் சிக்குமா..!
எதிர்கால எரிபொருள் விநியோகம் இரண்டு வல்லரசுகளின வசமே வரப்போகும் நிலையில் அது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

