• Login
Tuesday, October 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு SpaceX பங்கு இலவசம்: எலான் மஸ்க் அதிரடி..!! | Elon Musk Promises One Free SpaceX Share for Every Child in America Next Year — $10.5 Billion Plan Explained

GenevaTimes by GenevaTimes
October 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு SpaceX பங்கு இலவசம்: எலான் மஸ்க் அதிரடி..!! | Elon Musk Promises One Free SpaceX Share for Every Child in America Next Year — $10.5 Billion Plan Explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு SpaceX பங்கு இலவசம்: எலான் மஸ்க் அதிரடி..!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றின் தலைவருமான எலான் மஸ்க், உலகை ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எலான் மஸ்க் ,அடுத்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு இலவசமாக வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அடுத்த ஆண்டு, அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் எனது ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளிலிருந்து ஒரு பங்கை வழங்க போகிறேன். இது போல பல திட்டங்கள் என்னிடம் உள்ளன, அதில் முதல் திட்டம் இது என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு SpaceX பங்கு இலவசம்: எலான் மஸ்க் அதிரடி..!!

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தரவுகளின்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 72 முதல் 73 மில்லியன் பேர் உள்ளனர். இவ்வளவு குழந்தைகளுக்கும் இந்த பங்குகள் சென்றடையுமா என்ற கேள்வி எழுகிறது. கடந்த வார வர்த்தக நிலவரப்படி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை சுமார் 146 டாலர்கள் , இந்திய ரூபாயில் சுமார் 13,500 ரூபாய் ஆகும். இதன் அடிப்படையில், இந்த மாபெரும் பரிசு திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் 10.5 பில்லியன் டாலர்கள் இருக்கும் என மதிப்பிடலாம்.

எலான் மஸ்க் தனது பதிவில் my SpaceX shares என குறிப்பிட்டுள்ளதால், இது புதிதாக வெளியிடப்படும் பங்குகள் அல்ல, மாறாக அவரிடம் உள்ள சொந்த பங்குகளில் இருந்து வழங்கப்படலாம் என தெரிகிறது. ஃபோர்ப்ஸ் தரவுகளின்படி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் அதிகபடியான பங்குகளை வைத்துள்ளார் எலான் மஸ்க்.

2027-ஆம் ஆண்டில் எந்த மாதத்தில் இந்த பங்குகள் வழங்கப்படும், அதற்கான தகுதி விதிகள் என்ன என்பது குறித்து அவர் எதையும் தெரிவிக்கவில்லை. மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு தனியார் நிறுவனத்தின் பங்குகளை சட்டப்பூர்வமாக மாற்றுவது எப்படி என்ற நடைமுறை விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

ஏற்கனவே ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான க்வின் ஷாட்வெல் மற்றும் அவரது கணவர் ஆகியோர் இணைந்து, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த 2 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க குழந்தைகளுக்கு ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளை வழங்குவதாக உறுதியளித்திருந்தனர். தற்போது எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு அந்த இலக்கை ஒட்டுமொத்த அமெரிக்க குழந்தைகளுக்கும் விரிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு எதிர்கால சந்ததியினரிடையே முதலீட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தொழில்நுட்ப மற்றும் விண்வெளித் துறை நிறுவனங்களின் பங்குகளை சாமானிய மக்களின் குழந்தைகள் கைகளில் கொண்டு சேர்க்கும் முன்னெடுப்பாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும், இதன் நடைமுறை சிக்கல்கள் மற்றும் சட்டப்பூர்வ விதிகள் எவ்வாறு இருக்க போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share This Article

English summary

Elon Musk Promises One Free SpaceX Share for Every Child in America Next Year — $10.5 Billion Plan Explained

அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு SpaceX பங்கு இலவசம்: எலான் மஸ்க் அதிரடி..!! / Elon Musk has announced on X that he plans to give one of his own SpaceX shares to every child in America next year, calling it “the first of many” such initiatives.

Story first published: Monday, October 19, 2026, 16:54 [IST]

Other articles published on Oct 19, 2026

Read More

Previous Post

தவறாக வழிநடத்தப்பட்டேன்: ஏற்றுக்கொண்டார் மைத்திரிபால | Tamilmirror Online

Next Post

திமுக மேடையில் முதல் அமைச்சர் விஜய் குறித்து அநாகரீகமாக பேசுவதா? ஆதவ் அர்ஜுனா கோபம்… | Makkal Osai

Next Post
திமுக மேடையில் முதல் அமைச்சர் விஜய் குறித்து அநாகரீகமாக பேசுவதா? ஆதவ் அர்ஜுனா கோபம்… | Makkal Osai

திமுக மேடையில் முதல் அமைச்சர் விஜய் குறித்து அநாகரீகமாக பேசுவதா? ஆதவ் அர்ஜுனா கோபம்... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin