அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு டிரம்ப் அதிபரானதுமே இந்த மோதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி வருகிறார். இதுதொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே 2 கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து ஈரானை மிரட்டி வருகிறார். விரைவில் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி வருகிறார்.
மேலும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் டொனால்ட் டிரம்ப் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை குவித்து வருகிறார். ஈரான் மீதான தாக்குதல் பற்றி முழு விவரங்கள் டிரம்புக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், டிரம்ப் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், அமெரிக்காவின் எந்த அழுத்தத்திற்கும் அடி பணிய போவதில்லை என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வல்லரசு நாடுகள் கோழைத்தனமாக அணிவகுத்து ஈரானை தலைகுனிய வைக்கப்பார்க்கிறது என காட்டமாக தெரிவித்துள்ளார்




