Last Updated:
ஈரானின் கடற்படை, விமானப்படையை அழித்துவிட்டதாக டிரம்ப் தெரிவித்திருக்கும் நிலையில், அமெரிக்க போர்க்கப்பல்களை பாரசீக வளைகுடாவிற்குள் கொண்டுவர துணிவு இருக்கிறதா என்று ஈரான் ராணுவம் சவால் விடுத்துள்ளது.
அமெரிக்காவின் அதிநவீன போர்க் கப்பலை தாக்கி அழித்ததாக ஈரான் போலி செய்தி பரப்பி வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரான் ராணுவ ரீதியாக மிகவும் பலவீனமான நாடு என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், போலி செய்தியை வழங்குவதில் மிகவும் திறமையானவர்கள் என்று விமர்சித்துள்ளார். ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்பட்ட ஐந்து அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்களும் சேவையில் உள்ளதாகவும், மற்றொரு விமானமும் விரைவில் வானில் பறக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆப்ரகாம் லிங்கன் கப்பல் தீப்பிடித்து எரிவதாகக் காட்டப்படும் புகைப்படம் AI மூலம் உருவாக்கப்பட்டது என்றும் டிரம்ப் சாடியுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முன் வந்தபோதும், அதற்கு ஈரான் தயாராக இல்லை என்று தோன்றுவதாகக் கூறினார்.
இதனிடையே, ஈரானின் கடற்படை, விமானப்படையை அழித்துவிட்டதாக டிரம்ப் தெரிவித்திருக்கும் நிலையில், அமெரிக்க போர்க்கப்பல்களை பாரசீக வளைகுடாவிற்குள் கொண்டுவர துணிவு இருக்கிறதா என்று ஈரான் ராணுவம் சவால் விடுத்துள்ளது.
இந்நிலையில், தங்களுக்கு சேதம் ஏற்படுத்தியதற்கு ஈடாக அமெரிக்காவும், இஸ்ரேலும் உரிய இழப்பீடு வழங்கத் தவறினால், அவர்களது சொத்தில் அதே அளவை அழிப்போம் என்று ஈரானின் புதிய உச்சபட்ச தலைவர் மொஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார்.
Mar 16, 2026 12:47 PM IST

