Last Updated:
டிரம்பின் இந்த அதிரடி கருத்துகளால் சர்வதேச அளவில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் அரசியல் பதற்றம் உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் அங்கீகாரம் இல்லாமல் ஈரான் தலைவர் நீடிக்க முடியாது என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் நாட்டின் உச்ச தலைவராக இருந்த ஆயத்துல்லா அலி கமேனி, கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவரது மகனான 56 வயது முஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், ஈரானின் இந்தத் தேர்வில் தமக்கு மகிழ்ச்சி இல்லை என்றும், அமெரிக்காவின் அங்கீகாரம் இல்லாமல் ஈரானின் எந்தவொரு புதிய தலைவரும் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும், முஜ்தபா கமேனியை ஒரு தகுதியற்ற நபர் என்று விமர்சித்துள்ள டிரம்ப், ஈரானுடனான அடுத்தகட்ட போர் நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து ஆலோசித்து முடிவெடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் அங்கீகாரம் இன்றி ஈரான் தலைவர் நீடிக்க முடியாது.. அதிபர் டிரம்ப் எச்சரிக்கை…

